செக்கச் சிவந்த வானம்: புதிய பாடலை வெளியிட்ட படக்குழு - வீடியோ

நடிகர் சிம்பு

  • News18
  • Last Updated :
  • Share this:
    செக்கச் சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள `கள்ள களவாணி’ என்ற பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

    காற்று வெளியிடை படத்தை அடுத்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், டயானா இரப்பா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களை கடந்த 5-ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து படம் செப்டம்பர் 27-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    செக்கச்சிவந்த வானம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி படத்தின் லிரிக்கல் வீடியோக்களையும் ஒவ்வொன்றாக படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சிம்பு டயானா எரப்பா நடித்துள்ள ``கள்ள களவாணி” என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    Published by:Sheik Hanifah
    First published: