ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

செக்கச் சிவந்த வானம்: `மழைக் குருவி’ பாடலின் 1 நிமிட வீடியோ வெளியீடு

மழைக்குருவி பாடலில் சிம்பு, டயானா இராப்பா.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  செக்கச் சிவந்த வானம் படத்தின் ‘மழைக்குருவி’ பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.

  `காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.

  இயக்குநர் மணிரத்னம்-வைரமுத்து-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிருக்கும் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், படத்தின் இரண்டு பாடல்கள் செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன.

  `மழை குருவி' மற்றும் 'பூமி சுத்தும் சத்தம்' என்ற 2 பாடல்களில் மழைக்குருவி பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. சிம்பு வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ள பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.

  செக்கச் சிவந்த வானம் படத்தின் ‘மழைக்குருவி’ பாடலின் ஒரு நிமிட வீடியோ இன்று மாலை வெளியிடப்படுமெனப் படக்குழு அறிவித்துள்ளது.

  `காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.

  இயக்குநர் மணிரத்னம்-வைரமுத்து-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிருக்கும் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், படத்தின் இரண்டு பாடல்கள் செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன.

  `மழை குருவி' மற்றும் 'பூமி சுத்தும் சத்தம்' என்ற 2 பாடல்களில் மழைக்குருவி பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. சிம்பு வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ள பாடலின் ஒரு நிமிட வீடியோ  இன்று யூடுயூபில் வெளியாகியுள்ளது.

  வீடியோவை காண:

  ' isDesktop="true" id="53071" youtubeid="uu-dHooorcE" category="entertainment">

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Chekka Chivandha Vaanam, Mazahikuruvi song released, Youtube mazhaikuruvi