• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ராகவா லாரன்ஸ் பெயரைப் பயன்படுத்தி பணமோசடி - போலீசில் புகார்!

ராகவா லாரன்ஸ் பெயரைப் பயன்படுத்தி பணமோசடி - போலீசில் புகார்!

  • Share this:
    ராகவா லாரன்ஸ் பெயரைப் பயன்படுத்தி பண வசூல் செய்வதாக அவரது மன்றத்தினர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

    சண்டைப் பயிற்சி கலைஞராக திரைத்துறையில் அறிமுகமாகி பின்னர் நடன இயக்குநராக வளர்ந்து ஹீரோவானவர் ராகவா லாரன்ஸ். முனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.

    முனி படத்தின் அனைத்து பாகங்களும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தற்போது அந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் லாரன்ஸ். இந்தப் படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    திரைப்படத்துறை மட்டுமின்றி பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் ராகவா லாரன்ஸ் பெயரைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் பண வசூல் செய்து வருவதாக அவரது மன்றத்தினர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், சமூகவலைதளங்களில் ராகவா லாரன்ஸின் பெயரைப் பயன்படுத்தி போலியான ஐடியை உருவாக்கி வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெங்களூர், சேலம், ஊட்டி, ராமநாதபுரம், கொளத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் மர்ம நபர்கள் பண வசூல் செய்து வருகின்றனர். இந்த மர்ம நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவண செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: