Home /News /entertainment /

இரும்புத்திரை படத்தின் 2-ம் பாகமா ‘சக்ரா’? - விஷால் விளக்கம்

இரும்புத்திரை படத்தின் 2-ம் பாகமா ‘சக்ரா’? - விஷால் விளக்கம்

சக்ரா

சக்ரா

இரும்புத்திரை படத்தைப் போல் கதையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும் அந்தப் படத்தின் 2-ம் பாகமாக சக்ரா இருக்காது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இரும்புத்திரை. ஆன்லைனில் நடக்கும் மோசடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் 2-ம் பாகம் வெளிவர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படம் இரும்புத்திரையின் 2-ம் பாகம் என்று பேசப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நடிகர் விஷால், “இரும்புத்திரை படம் போலவே இந்தப் படமும் ஆன்லைன் முறைகேடு குறித்த படம் தான். ஆனால் இரும்புத்திரை படத்தின் 2-ம் பாகம் இல்லை.

இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தில் மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டால் பெரிய விஷயமாக கருதுகிறோம். ஆனால் உங்கள் வாழ்க்கையே ஹேக் செய்யப்பட்டால்? நவீன தொழில்நுட்பத்தில் பல மோசடிகள் நடைபெறுகின்றன. அதைப்பற்றி சக்ரா திரைப்படம் பேசும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.” என்று கூறியுள்ளார்.



இத்திரைப்படத்தில் தனது தந்தையின் அசோகச் சக்கர பதக்கத்தை தேடிக் கண்டுபிடிக்கும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார். அவருடன் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்குகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் படக்குழு மே 1-ம் தேதி சக்ரா திரைப்படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க: ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு திடீர் ரத்து?
Published by:Sheik Hanifah
First published:

Tags: Vishal

அடுத்த செய்தி