• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தாண்டவ் வெப் சீரிஸ்- விளக்கம் கேட்டு அமேசான் ப்ரைமுக்கு மத்திய அரசு கடிதம்

தாண்டவ் வெப் சீரிஸ்- விளக்கம் கேட்டு அமேசான் ப்ரைமுக்கு மத்திய அரசு கடிதம்

தாண்டவ்

தாண்டவ்

தாண்டவ் வெப் சீரிஸில் இந்து மதக் கடவுள் குறித்து இழிவுபடுத்தியதாக புகார் எழுந்தநிலையில் அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • Share this:
    நடிகர்கள் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, டிக்மான்ஷு துலியா மற்றும் கிருத்திகா கம்ரா ஆகியோர் நடித்த வெப் சீரிஸ் தாண்டவ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் வெளியாகி ஒரு நாள் ஆகியுள்ள நிலையில் பல பாஜக தலைவர்கள் இது குறித்து விமர்சித்துள்ளனர். பாஜக தலைவர் ராம் கதம் ஞாயிற்றுக்கிழமை, இந்து தெய்வமான சிவனை கேலி செய்யும் வகையில் வலைத் தொடரில் வசனங்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார். மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு காட்கோபர் தொகுதி எம்.எல்.ஏ ராம் கதம் இந்தத் தொடர் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்பதால் அதை அகற்ற வேண்டும் என்று கோரினார். மேற்கு காட்கோபர் காவல் நிலையத்திலும் இது தொடர்பாக FIR பதிவு செய்தார். அதேபோல பா.ஜ.க எம்.பி மனோஜ் கோடாக், ‘மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், ‘அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கு தணிக்கை முறை கொண்டுவர வேண்டும். ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களில் வன்முறை, போதைப் பொருள்கள், வெறுப்பு, பாலியல் காட்சிகள் மற்றும் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்தநிலையில், மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சகம், தாண்டவ் தொடர் தொடர்பாக அமேசான் ப்ரைம் விளக்கம் அளிக்கவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: