திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதிக் கூடாது - தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்..

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதிக் கூடாது - தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்..

திரையரங்குகள்

திரையரங்குகளில் 100 % இருக்கை அனுமதியை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 • Share this:
  கொரோனா ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டன. சிலர் தங்களின் சொந்த தொழிலை கைவிட்டு வேறு வேலைக்கும் சென்று தங்களின் குடும்பத்தினை காப்பாற்றினர். அந்த வகையில் கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.

  பின்பு கொரோனா தொற்று குறைய தொடங்கிய பின் கிட்டத்திட்ட 6 மாதங்கள் கழித்து திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் 50 % இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்று நிபந்தனையும் விதித்தது. இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் 100% இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். நடிகர் விஜய்யும் முதலமைச்சரை சந்தித்து மாஸ்டர் படம் வெளியாவதை முன்னிட்டு 100% இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

  இதையடுத்து மாஸ்டர், ஈஸ்வரன் படத்திற்கு திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.இதற்கு பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தது.  இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதிக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,தற்போது 100% இருக்கைகளுக்கு அனுமதி என்பது மத்திய அரசின் அறிவுறுத்தலை மீறிய செயலாகும்.எனவே மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின் படி புதிய உத்தரவை பிறப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.மேலும் 100% இருக்கை அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: