GOD MAN போன்று இந்துமதத்தை இழிவு படுத்தும் வெப்சீரிஸுக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் : பாஜக தலைவர் முருகன்

GOD MAN போன்று இந்துமதத்தை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து வெளியாகி வரும் வெப் சீரியல்களுக்கு சென்சார் தேவை என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

GOD MAN போன்று இந்துமதத்தை இழிவு படுத்தும் வெப்சீரிஸுக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் : பாஜக தலைவர் முருகன்
தமிழக பாஜக தலைவர் முருகன்
  • Share this:
GOD MAN போன்று இந்துமதத்தை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து வெளியாகி வரும் வெப் சீரியல்களுக்கு சென்சார் தேவை என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக மாநில பாஜக தலைவர் முருகன் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,  நீண்டகால சிக்கலுக்கான தீர்வாக முத்தலாக், காஷ்மீர், CAA போன்ற பல முக்கியமான சட்டங்கள் 6 ஆண்டு கால ஆட்சியில்  இயற்றப்பட்டுள்ளதாகவும் அரசின் முன் திட்டமிடலால் இந்தியாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  இன்று உலக நாடுகளுக்கு ppe கிட், முகக்கவசம் ஏற்றுமதி செய்யுமளவிற்கு இந்தியா  வளர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.


கட்டுப்பாடு பகுதிகள் தவிர்த்து கோவில்கள் திறக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்ட முருகன் திமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளதாகவும்,  ஆளுங்கட்சி எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வன்கொடுமை புகார் உள்ள கட்சி எம்.பி க்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸ்டாலின் மவுனம் காப்பது, அவரும் அதை ஆதரிக்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

மேலும் கருப்பு பணத்தை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளதாக தெரிவித்த அவர் GOD MAN போன்று இந்துமதத்தை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து வெளியாகி வரும் வெப் சீரியல்களுக்கு சென்சார் தேவை என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

Also see... சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு என்ன செய்கிறது? - முதல்வர் பழனிசாமி விளக்கம்

காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலி சமூகவலைதளப் பக்கங்கள்: கவர்ச்சிகரமான முதலீடுகள் என்ற பெயரில் இணைய மோசடி

சென்னையில் குடிசைப் பகுதிகளில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி








First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading