முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / `நல்ல சினிமா எடுத்திருக்கிறீர்கள்’: சென்சார் போர்டு பாராட்டிய `பரியேறும் பெருமாள்’!

`நல்ல சினிமா எடுத்திருக்கிறீர்கள்’: சென்சார் போர்டு பாராட்டிய `பரியேறும் பெருமாள்’!

பரியேறும் பெருமாள் படத்தின் போஸ்டர்

பரியேறும் பெருமாள் படத்தின் போஸ்டர்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பரியேறும் பெருமாள் படத்தை தணிக்கை குழு அதிகாரிகள் வெகுவாக பாராட்டுயுள்ளனர். இப்படத்துக்கு யூ-சான்றிதழ் கிடைத்துள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், எந்த இடத்திலும் கட் சொல்லாமல் படத்திற்கு யு-சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள். 2 இடங்களில் மட்டும் மியூட் செய்யுமாறு கூறிய அதிகாரிகள், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

பரியேறும் பெருமாள் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிங்கேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 28-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

தணிக்கை அதிகாரிகள் பாராட்டு: முன்னதாக, படத்தின் கதை மற்றும் கதைக்களத்தை வெகுவாக பாராட்டிய தணிக்கை குழு அதிகாரிகள் இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்திடமும் `இந்த படத்தில் எந்த இடத்திலும் கட் சொல்ல இடமில்லை. இது குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். இதுபோன்ற நல்ல கதையம்சத்துடன் கூடிய கமர்சியல் படத்தில் சின்ன சின்ன இடங்களில் கட் சொன்னால் அதன் உண்மைத்தன்மை குலைந்துவிடும், நல்ல சினிமா எடுத்திருக்கிறீர்கள், வாழ்த்துகள்’ என்று பாராட்டியிருக்கிறார்கள்.

First published:

Tags: Censor Board, Pa. ranjith, Pariyerum perumal, U certificate for pariyerum perumal