Home /News /entertainment /

மக்கள் செல்வி வரலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்!

மக்கள் செல்வி வரலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்!

வரலட்சுமி

வரலட்சுமி

உன்னுடைய லட்சியங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். வருகின்ற காலத்தில் நீ உண்மையின் பக்கம் நின்று செயல்பட வேண்டும் என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    நடிகை வரலட்சுமியின் பிறந்த நாளிற்கு ட்விட்டரில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர்.

    நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை வரலட்சுமியின் பிறந்த நாளிற்கு வாழ்த்து கூறியதுடன் அவரின் அடுத்தப் படமான டேனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.



    நடிகர் ஆர்யாவின் ட்விட்டர் பதிவில் செல்லகுட்டி வருமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.





    நடிகரும் வரலட்சுமியின் தந்தையுமான நடிகர் சரத்குமார் வரலட்சுமிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் உன்னுடைய லட்சியங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். வருகின்ற காலத்தில் நீ உண்மையின் பக்கம் நின்று செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



    கன்னத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை வரலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    வரலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் பல வித்தியாசமான கதைகளில் நடிக்கவும் வாழ்த்துகள் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.





    நடிகர் சதீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை வரலட்சுமியுடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.



    நடிகர் பிரசன்னா அவரது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் மக்கள் செல்வி, மை டியார் பார்ட்னருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.



    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Varalaxmi Sarathkumar

    அடுத்த செய்தி