HBD Surya: இதான் நாங்க எடுத்த முதல் செல்ஃபி..அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கார்த்தி

கார்த்தி-சூர்யா

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    நடிகர் சூர்யா தனது 46வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் நேற்று சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. படத்தின் பெயர் ‘எதற்கும் துணிந்தவன்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். கிராமத்து கதையை தழுவி இந்த படம் இருக்கலாம். இந்நிலையில் நேற்று சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் சூர்யா 39 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிவுள்ளது.



    மேலும் சூர்யாவுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவின் தம்பியான கார்த்தி தனது அண்ணனுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Karthi Sivakumar (@karthi_offl)






    அதில்’நாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட முதல் செல்ஃபி இது. என்னுடைய இன்ஸ்பிரேஷனான எனது அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ‘என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் மலையாள நடிகர்களான ஆசிஃப் அலி, துல்கர் சல்மான், நிவின் பாலி உள்ளிட்டோர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.



    நிவின் பாலி தனது பேஸ்புக்கில்,’ஹேப்பி பர்த்டே டியரஸ்ட்..நீங்கள் ஒரு சிறந்த மனிதர்’என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    அதே போல் மலையாள நடிகரான ஆசிஃப் அலி , ஹேப்பி பர்த்டே சூர்யா சிவக்குமார் சார் என்று பதிவிட்டுள்ளார்.

     



    தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிலும் கலக்கி வரும் துல்கர் சல்மான், இந்த புகைப்படம் சூப்பராக உள்ளது என்று கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காமெடி நடிகர் சத்தீஸும் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

     

    மேலும் நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: