HOME»NEWS»ENTERTAINMENT»celebrities sridevi preetha are participating in this week episode of colors kitchen vin

இந்த வாரம் செஃப் தாமு உடன் கலர்ஸ் கிச்சனில் இணையும் பிரபலங்கள் யார் தெரியுமா?

தெவிட்டாத சில உணவுகளை உங்கள் மனம் கவர்ந்த இவர்கள் சமைப்பதை கண்டு ரசிக்க நவம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் மதியம் 12.00 மணிக்கு மறக்காமல் கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள்.

இந்த வாரம் செஃப் தாமு உடன் கலர்ஸ் கிச்சனில் இணையும் பிரபலங்கள் யார் தெரியுமா?
செஃப் தாமு
  • News18
  • Last Updated :
  • Share this:

கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியில் செஃப் தாமு, செஃப் ஸ்ரேயா உடன் இணைந்து தங்களது சமையல் திறன்களை நேர்த்தியான வெளிப்படுத்த பிரபலங்கள் ஸ்ரீதேவி மற்றும் ப்ரீத்தா கலந்துகொள்கின்றனர்.

எளிமை, சுவை மற்றும் கேளிக்கை… கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின் இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் இவை அனைத்தும் இருப்பது நிச்சயம். செஃப் தாமு மற்றும் செஃப் ஸ்ரேயா அட்கா, உங்கள் மனம் கவர்ந்த ஸ்ரீதேவி மற்றும் ப்ரீத்தா என்ற பிரபலங்களோடு இணைந்து, சுவையான உணவுகளின் செய்முறை விளக்கத்தை வழங்கும் அதே வேளையில், அவர்களது நகைச்சுவையான பேச்சால் உங்களை குதூகலப்படுத்தவிருக்கின்றனர்.

நவம்பர் 28 சனி மற்றும் நவம்பர் 29 ஞாயிறன்று மதியம் 12.00 மணியளவில் கலர்ஸ் தமிழ் அலைவரிசையில், கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியை தவறாமல் நீங்கள் பார்ப்பதற்கு, உங்கள் நாவின் சுவை நரம்புகளை தூண்டி விடுகின்ற 3 காரணங்கள் இதோ.



தாமு தர்பார்: தனக்கே உரிய பிரத்யேக பாணியில் தமிழ்நாட்டின் சுவைமிகு உணவுகளை மறுஉருவாக்கம் செய்வதிலும் மற்றும் புத்துயிர் அளிப்பதிலும் பிரபலமாக அறியப்படும் செஃப் தாமு, ஒரு அற்புதமான உணவை உருவாக்குவதன் மூலம் இந்நிகழ்ச்சியை தொடங்குகிறார். “தாமு தர்பார்” என்ற பிரிவின் ஒரு பகுதியாக ஈசி கோக்கனட் ரைஸ் மற்றும் கத்திரிக்காய் கடைசல் என்ற இரு எளிய, ஆனால் அதேவேளையில் அற்புதமான சுவை கொண்ட உணவுகளை சமைத்துக்காட்டும் செஃப் தாமு, இந்த ரெசிபிக்களில் பயன்படுத்தப்பட்டுள்ள, தேடி தேர்வு செய்த உட்பொருட்கள் பற்றிய ஆர்வமூட்டும் பின்புலத்தை பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

Also read... Gold Rate | சவரனுக்கு ₹296‌ குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?



பிரபல சமையற் கலைஞர்கள்: விஐபி வீட்டு சமையல் மற்றும் கில்லாடி குக் என்ற இந்நிகழ்ச்சியின் இரு பிரிவுகளின் கீழ், தங்களது சமையல் திறன்களை அனைவரும் அறிய காட்சிப்படுத்துவதற்காக துடிப்பான இரு பிரபலங்களான ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி இந்த வார இறுதி நாட்களின் எபிசோடுகளில் தோன்றுகின்றனர். தங்களது குடும்பத்தினரோடு இணைந்து, பங்கேற்கின்ற இந்த பிரபலங்கள், அவர்களது வாழ்க்கைப் பற்றிய சுவையான துணுக்குகள் மற்றும் சமையல் மீதான அவர்களது நேசம் பற்றி தங்களது சிந்தனைகளை பகிர்ந்து கொள்கின்றனர். சாக்லேட் பரோட்டா, மீன் பனியாரம், உப்பு கறி உருண்டைக்கிழங்கு மற்றும் சீஸ் ஸ்டஃப்டு மஷ்ரூம் ஃபிரிட்டர்ஸ் போன்ற மாறுபட்ட சுவைகளில் பல்வேறு உணவுகளை சமைத்து, அதன் செய்முறை விளக்கத்தையும் இவர்கள் சுவைபட வழங்குகின்றனர்.

எளிதான, ஊட்டச்சத்து மிக்க சமையல்: ஊட்டச்சத்து நிறைந்த ஒரு முழுயைமான உணவு மீது சிறப்பு கவனம் செலுத்தும் செஃப் ஸ்ரேயா அட்கா, ஸ்பைசி ஸ்பிரிங் ரோல் மற்றும் இனிப்பு காரம் பன்னீர் என்ற எளிதில் செய்யக்கூடிய இரு பதார்த்தங்களை எப்படி தயாரிப்பது என்று நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். “சுடச்சுட சமையல்” என்ற பெயரில் செஃப் ஸ்ரேயா வழங்கும் பகுதியின் ஒரு அங்கமாக இது இடம்பெறுகிறது. இந்த பதார்த்தங்களுக்கான ரெசிப்பிக்கள் மற்றும் அவைகளின் உட்பொருட்கள் பற்றிய விளக்கத்தோடு உங்களது ஊட்டச்சத்தை எப்படி நீங்கள் இன்னும் வலுப்படுத்தலாம் என்பது பற்றி பயனுள்ள ஆலோசனை குறிப்புகளை ஆர்வமூட்டும் வகையில் பகிர்ந்து கொள்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: