HOME»NEWS»ENTERTAINMENT»celebrities kavita and gayatri priya are participating in this week episode of colors kitchen vin ghta

செஃப் தாமு உடன் இந்த வாரம் கலர்ஸ் கிச்சனில் இணையும் பிரபலங்கள் யார் தெரியுமா?

கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியான தாமு தர்பார் பிரிவில் இந்த வாரம் அவர் மசாலா பரோட்டா மற்றும் சிகப்பு தினை உருண்டை ஆகிய 2 புதிய உணவு வகைகளை சமைக்கவிருக்கிறார்.

செஃப் தாமு உடன் இந்த வாரம் கலர்ஸ் கிச்சனில் இணையும் பிரபலங்கள் யார் தெரியுமா?
கலர்ஸ் கிட்சன்
  • News18
  • Last Updated :
  • Share this:

கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியில் செஃப் தாமு, செஃப் ஸ்ரேயா உடன் இணைந்து தங்களது சமையல் திறன்களை நேர்த்தியான வெளிப்படுத்த பிரபலங்கள் கவிதா மற்றும் காயத்ரி பிரியா
கலந்துகொள்கின்றனர்.

வாரந்தோறும் சுவையான உணவுகளை சமைத்து வழங்குவதோடு குறைவில்லாத கேளிக்கையையும் பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சி. இந்த வார நிகழ்ச்சியில் பிரபலங்கள் கவிதா மற்றும் காயத்ரி பிரியா ஆகியோர் தங்கள் சமையல் திறன்களை வெளிப்படுத்தத் தயாராக உள்ளனர்.

இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களின் பசியை நிச்சயம் போக்கும். மேலும் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக அவர்களது குடும்பத்தினரும், நண்பர்களும் சேர்ந்து சிறப்பான உணவுகளை சமைத்து வழங்கவிருக்கிறார்கள். வெவ்வேறு உணவுகளின் சுவைகளை ஒரே இடத்தில் அவர்கள் வழங்கவிருப்பதோடு, அவர்களுடன் சமையல் கலை நிபுணர்கள் செப் தாமு மற்றும் செப் ஸ்ரேயா அட்கா ஆகியோரும் ருசியான, சிறந்த உணவுகளை செய்து காண்பிக்கவிருக்கிறார்கள். நாவில் நீர் ஊற வைக்கும் இந்த நிகழ்ச்சியை இந்த வார இறுதியில் 12 மற்றும் 13-ந்தேதி நண்பகல் 12 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து ரசியுங்கள்.



சமையல் வழிகாட்டி: சிறந்த சமையல்கலை நிபுணரும் இந்திய அளவில் புகழ்பெற்றவருமான செப் தாமு, வெப்பம் நிறைந்த இந்தியாவிற்கு ஏற்ற சுவையான உணவுகளை தயாரித்து பார்வையாளர்களை கவர்ந்திழுக்கவிருக்கிறார். கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியான தாமு தர்பார் பிரிவில் இந்த வாரம் அவர் மசாலா பரோட்டா மற்றும் சிகப்பு தினை உருண்டை ஆகிய 2 புதிய உணவு வகைகளை சமைக்கவிருக்கிறார்.

பிரபலங்களின் சமையல்: விஐபி வீட்டு சமையல் மற்றும் கில்லாடி குக் என்ற பிரிவுகளின் ஒரு பகுதியாக தங்களது சமையற்கலை திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கவிதா மற்றும் காயத்ரி பிரியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்த பிரபலங்கள் தங்களது அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மலபார் செம்மா கறி, நெல்லிக்காய் உருளை கட்லெட், மாங்காய் தோல் குழம்பு மற்றும் இடியப்பம் பீஜோ போன்ற சுவையான உணவுகளை சமைத்து வழங்க இருப்பதை மகிழ்ச்சியோடு நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

Also read... Gold Rate | சவரனுக்கு ₹200 குறைந்தது தங்கம் விலை... மாலை நிலவரம் என்ன?



புதுமையின் மேஸ்ட்ரோ: உணவுகளை சுவைபட வழங்குபவர் என புகழ்பெற்றிருக்கும் செப் ஸ்ரேயா அட்கா, இந்த வார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுடச்சுட சமையல் பிரிவில் பன்னீர் பசந்தா பாஸ்தா மற்றும் உருளை சீஸ் பன் ஆகியவற்றை சமைக்கவிருக்கிறார். அவர் ருசியான உணவு சமைப்பதை பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்வதோடு உங்களுக்கான ஊட்டச்சத்து அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான சில ஆலோசனைகளையும் வழங்கவிருக்கிறார்.

பார்வையாளர்களின் மனதில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கும் தொகுப்பாளர் ஶ்ரீ ரஞ்சனி, தொகுத்து வழங்கும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைவருக்கும் சிறந்த விருந்தாக அமையும். உங்கள் சமையலறையை தேடி வரும் இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் 12 மற்றும் 13ம் தேதி மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதை காணத்தவறாதீர்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: