ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vijay: 65-வது படத்தின் டைட்டிலை வெளியிட்ட விஜய்... ட்விட்டரில் கொண்டாடும் பிரபலங்கள்!

Vijay: 65-வது படத்தின் டைட்டிலை வெளியிட்ட விஜய்... ட்விட்டரில் கொண்டாடும் பிரபலங்கள்!

பீஸ்ட்

பீஸ்ட்

படத்தின் பெயரை ட்விட்டரில் விஜய் பதிவிட்டவுடன் பிரபலங்கள் பலர் அதற்கு வாழ்த்துகளை தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

விஜய் நடிக்கும் 65-வது படத்தின் டைட்டில் வெளியானதையொட்டி ட்விட்டரில் பிரபலங்கள் பலர், படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டைட்டில் படத்தை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜயின் 65-வது படம் இது என்பதால், படத்திற்கு டைட்டில் முடிவாகும் வரை இப்படம் தளபதி 65 என்று அடையாளப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இப்படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது.

Also read... Thuppakki - 2: துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தும் முருகதாஸ்!

படத்தின் பெயரை ட்விட்டரில் விஜய் பதிவிட்டவுடன் பிரபலங்கள் பலர் அதற்கு வாழ்த்துகளை தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

65-வது படத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரபலங்கள் அனைவரும் விஜயின் பிறந்த நாளிற்கும் வாழ்த்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Actor Vijay