BYJU's Young Genius: முதல் எபிஸோடில் லிடியன் நாதஸ்வரம், மேகாலி மாளபிகாவின் சாதனைகளை காணுங்கள்!

அதிசயிக்கத்தக்க குழந்தை மேதைகளை அடையாளபடுத்தும் BYJU-வின் இளம் ஜீனியஸ் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

அதிசயிக்கத்தக்க குழந்தை மேதைகளை அடையாளபடுத்தும் BYJU-வின் இளம் ஜீனியஸ் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

 • Share this:
  குழந்தை மேதைகளை அடையாளபடுத்தும் BYJU-வின் இளம் ஜீனியஸ் தொடர் நாளை முதல் நியூஸ்18 தொலைக்காட்சியில் தொடங்குகிறது. அதன் முதல் எபிஸோடில், பியானோ இசைக்கலையில் உலகளவில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய லிடியன் நாதஸ்வரம் (வயது 15) மற்றும் நம்ம முடியாத வகையில் நினைவு ஆற்றலை வெளிப்படுத்தி பல சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து ‘இந்தியாவின் கூகுள் பெண்’ என புகழப்படும் மேகாலி மாளபிகாவின் (வயது 14) ஆகியோர் இளம் தலைமுறையினருக்கு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து அவர்களை உத்வேகப்படுத்த இருக்கின்றனர்.

  லிடியன் நாதஸ்வரம்:  நிமிடத்திற்கு 190 உள்ளீடுகள் என்ற அளவில் மிக வேகமாக பியானோவை இசைக்கும் அபார திறனை பெற்றிருக்கிறார் லிடியன் நாதஸ்வரம். இவரால் கண்ணை கட்டிக் கொண்டெ கூட இதனை செய்ய முடியும் என்பது தனிச்சிறப்பு. இதன் மூலம் 2019ம் ஆண்டின் சிறப்பு என இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். புகழ்பெற்ற Ellen DeGeneres எனும் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார்.

  தனது திறமை குறித்து டியன் நாதஸ்வரம் கூறுகையில், “எனக்கு கனவு நிறைவேறியதை போல இருந்தது, உலகின் மிகவும் மதிக்கத்தக்க டாக் ஷோ அது, அதில் ஒரு நாள் நிச்சயம் நாமும் கலந்துகொள்வோம் என எனது தந்தை எப்போது கூறுவார்” என தெரிவித்துள்ளார்.  Atkan Chatkan எனும் திரைப்படத்தில் சமீபத்தில் நடித்திருக்கும் லிடியன் மோகன்லால் இயக்கி வரும் 3டி படமான Barroz-ற்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

  இப்போது சொந்தமாக இசையமைத்து வருகிறேன், படங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். நடிகர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்கின்றனர், அந்த உணர்வுகளை எவ்வாறு இசையாக வெளிப்படுத்த முடியும் என யோசிப்பேன், தனிப்பட்ட முறையில் எனக்கு பல விஷயங்களையும் இது கற்றுத்தந்துள்ளது என லிடியன் கூறினார்.

  மேகாலி மாளபிகா:  இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ஸில் தன் பெயரில் 4 சாதனைகளை பதிவிட்டிருக்கும் மேகாலியை இந்தியாவின் கூகுள் பெண் என்றும் அழைக்கின்றனர்.

  இது தொடர்பாக அவர் கூறுகையில், என் தந்தைக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன், கூகுள் பெண்ணாக உயர்ந்ததற்கு நான் அவருக்கு தான் கடமைப்பட்டுள்ளேன். இது தவிர வயலின் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வெல்ல விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள் நான் அதில் பரிசு வெல்வேன் என தெரிவித்துள்ளார்.  மேகாலியின் திறமை எவ்வாறு வெளிப்பட்டது என அவர் தந்தை விவரித்தார், FIFA உலகக் கோப்பையின் போது பிரபல பாடகி ஷகீரா ஸ்டேடியத்தில் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது மேகாலிக்கு 4 வயது தான் இருக்கும், அவரின் நடனத்தை பிடித்துப்போகவே நான் ஷகீராவை பார்க்க வேண்டும் என கூறினார்.

  உடனே நான் ஷகீரா நம் நாட்டைச் சேர்ந்தவர் கிடையாது, அவர் கொலம்பியாவில் இருக்கிறார் என்றேன். அதைக் கேட்டவுடன் கொலம்பியா எங்கே இருக்கிறது என என்னிடம் கேட்டார். உலக மேப்பில் இருந்த கொலம்பியாவை அப்போது காட்டினேன். பின்னர் சில நாட்கள் கழித்து மேப்பில் தான் பார்த்தவற்றை சரியாக நினைவு கூர்ந்து என்னிடம் தெரிவித்தார். இப்படித்தான் அவரின் ஞாயகத்திறன் குறித்து நான் அறிந்தேன் என குறிப்பிட்டார்.

  BYJU-வின் இளம் ஜீனியஸ் தொடரானது நாளை (ஜனவரி 16) முதல் நியூஸ் 18 குழுமத்தின் 18 சானல்களிலும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று ஒளிபரப்பாகும். அதன் மறு ஒளிபரப்பு ஞாயிறன்று ஒளிபரப்பப்படும்.
  Published by:Arun
  First published: