500 மில்லியன் பார்வையாளர்ளை பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடல்...மேக்கிங் வீடியோவை வெளியிட்டு சர்பிரைஸ் செய்த படக்குழு

500 மில்லியன் பார்வையாளர்ளை பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடல்...மேக்கிங் வீடியோவை வெளியிட்டு சர்பிரைஸ் செய்த படக்குழு

புட்ட பொம்மா பாடல்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புட்ட பொம்மா பாடல் யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

 • Share this:
  தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜூன்.இவர் 2003 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு இவர் நடித்த
  ‘ஆர்யா’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.மேலும் அல்லு அர்ஜுனின் நடனத்திற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்று கூறலாம்.

  அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் ‘அளவைக்குந்தபுரமுலோ’என்ற திரைப்படம் தெலுங்கில் வெளியானது. ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியான இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவானது. இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘புட்ட பொம்மா’ பாடல் தெலுங்கு ரசிகர்கள் இல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.ரசிகர்கள் இந்த பாடலை காலர் டியூன்,வாட்ஸ் அப் ஸ்டேடஸ் என அனைத்திலும் தெறிக்கவிட்டனர்.

  இந்நிலையில்‘புட்ட பொம்மா’ பாடல் யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.


  இந்த செய்தியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த மகிழ்ச்சியான செய்தியை கொண்டாடும் வகையில் புட்ட பொம்மா பாடலின் மேக்கிங் வீடியோவையும் பதிவிட்டு,’உங்களுக்கான சர்பிரைஸ் இதோ’ எனக் கூறியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்...
  Published by:Tamilmalar Natarajan
  First published: