‘கன்னி மாடம்’ பட இயக்குநரின் அடுத்த படத்தில் கரம் கோர்த்த ‘உறியடி’ நடிகர்!

போஸ் வெங்கட்டின் அடுத்த பட அறிவிப்பு

 • Share this:
  போஸ் வெங்கட் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  சாதி ஆணவக் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கன்னி மாடம் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் போஸ் வெங்கட். ஸ்ரீராம், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

  முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த போஸ் வெங்கட், அடுத்தபடியாக உறியடி பட இயக்குநர் நடிகர் விஜயகுமார் நாயகனாக நடிக்கிறார். மேலும் நடிகர் பசுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

  எம்.பி.மகேந்திரன், ஆர்.பாலகுமார் தயாரிக்கும் இத்திரைப்படம் விளையாட்டையும், தண்ணீர் பிரச்னையையும் மையப்படுத்தி சமூக பிரச்னையை பேசும் விதத்தில் உருவாக்கப்பட இருக்கிறது.

  ஜூலை மாதம் முதல் காரைக்குடி, பேராவூரணி புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. விரைவில் படத்தின் டைட்டில், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க: சிரஞ்சீவி படத்திலிருந்து விலகியது ஏன்? த்ரிஷா விளக்கம்!
  Published by:Sheik Hanifah
  First published: