ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? - கேரள முன்னாள் டிஜிபிக்கு பதில் கொடுத்த போனி கபூர்!

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? - கேரள முன்னாள் டிஜிபிக்கு பதில் கொடுத்த போனி கபூர்!

கணவர் போனி கபூருடன் ஸ்ரீதேவி

கணவர் போனி கபூருடன் ஸ்ரீதேவி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, கொலை என்று கேரள மாநில முன்னாள் டிஜிபி ரிஷிராஜ் சிங் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இதுகுறித்து போனி கபூர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

  கடந்த ஆண்டு தனது உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி , ஹோட்டல் அறையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

  அவர் உயிரிழந்து ஒரு வருடம் கடந்த நிலையில், அவரின் இறப்பு குறித்து கேரள மாநில முன்னாள் டிஜிபி ரிஷிராஜ் சிங் ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தனது நண்பரும், தடயவியல் நிபுணருமான உமாதாதன் தன்னிடம் தெரிவித்ததாக கூறியிருந்தார்.

  இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன் கேரள நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த கேரள மாநில முன்னாள் டிஜிபி ரிஷிராஜ் சிங், “ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடத்தப்படட விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும், தடயங்களும் அவரது மரணம் ஒரு விபத்து அல்ல என்பதை தெரிவிப்பதாக மறைந்த தடயவியல் நிபுணர் உமாதாதன் என்னிடம் கூறினார்.

  டாக்டர் உமாதாதன் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து என்னிடம் கூறியது என்னவென்றால், நடிகை ஸ்ரீதேவி அதிகமாகக் குடித்துவிட்டு குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது. அப்படியே அவர் அதிகமாகக் குடித்திருந்தாலும் வெறும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது. வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, ஒரு அடி தண்ணீரில் நிச்சயம் அவர் மூழ்கி உயிரிழந்திருக்க முடியாது என்று தெரிவித்ததாக டிஜிபி கூறியுள்ளார்.

  மறைந்த தடயவியல் நிபுணரான உமாதாதன் குறித்து அளித்த தனது பேட்டியில் டிஜிபி இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் இதுகுறித்து ஸ்பாட் பாய் என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இதுபோன்ற கதைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும்.

  அதனால் இதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கதை ஒருவரின் கற்பனை மட்டுமே” என்று கூறியுள்ளார்.

  வீடியோ பார்க்க: புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கொதித்தெழுந்த சூர்யா!

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Sridevi