யுவனை வாழ்த்திய போனி கபூர் - ட்ரெண்டிங்கில் ‘வலிமை’

யுவனை வாழ்த்திய போனி கபூர் - ட்ரெண்டிங்கில் ‘வலிமை’

போனி கபூர் | அஜித்

யுவனை வாழ்த்தி தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் செய்திருக்கும் நிலையில் அதிலிருக்கும் வலிமை ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் அஜித்தின் தீவிர ரசிகர்கள்.

  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதில் நடிகர் கார்த்திகேயா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட்டன. அதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகின.

ஆனாலும்‘வலிமை’ படக்குழு நீண்ட நாட்களாக படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடாததால் அப்டேட் வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் வாயிலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். சிலர் ஒரு படி மேலே போய் அப்டேட் கேட்டு மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டினர். அதில்‘வலிமை’ திரைப்படத்தின் செய்திகள் வெளிவராததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்டேட் காணவில்லை என்று குறிப்பிட்டு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் புகைப்படத்தையும் அச்சிட்டிருந்தனர்.இந்நிலையில் யுவன் சங்கர்ராஜா இசையில் ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வைகளைப் பெற்று தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே யூடியூபில் அதிக வியூஸ் பெற்ற பாடலாக சாதனை படைத்திருப்பதைக் குறிப்பிட்டு யுவனுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார் போனி கபூர்.மேலும் படிக்க: புற்றுநோயால் அவதிப்படும் நடிகர் தவசி - உதவி கேட்டு உருக்கமான கோரிக்கை

போனி கபூரின் ட்விட்டர் பதிவில் #வலிமை ஹேஷ்டேக் இடம்பெற்றிருந்ததைப் பார்த்த அஜித் ரசிகர்கள் அதை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் விரைவில் அப்டேட் வரும் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
Published by:Sheik Hanifah
First published: