ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சோனு சூட்டின் ஓட்டலை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை

சோனு சூட்டின் ஓட்டலை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை

நடிகர் சோனு சூட்

நடிகர் சோனு சூட்

அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதியை அவர் ஓட்டலாக மாற்றிவிட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சோனு சூட்டிற்கு நோட்டீஸ் அனுப்பினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சட்டவிரோத கட்டுமானம் என பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் ஓட்டலை இடிக்க மாநகராட்சி முயன்ற நிலையில், அதற்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

  பாலிவுட்டில் பிரபலமான நடிகர் சோனு சூட். தமிழில், கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து கவனிக்கப்பட்டார். இவருக்கு சொந்தமாக மும்பை ஜுஹூ பகுதியில் 6 மாடிகள் கொண்ட ஓட்டல் உள்ளது.

  அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதியை அவர் ஓட்டலாக மாற்றிவிட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சோனு சூட்டிற்கு நோட்டீஸ் அனுப்பினர். அதோடு ஓட்டலை இடிக்கும் முயற்சியும் மேற்கொண்டனர். இதனை எதிர்த்து சோனுசூட் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

  இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது குடியிருப்பு பகுதியை சோனுசூட் 24 அறைகள் கொண்ட ஓட்டலாக மாற்றி இருப்பதாக மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு சோனு சூட் தரப்பில் ஆஜரான வக்கீல் ஓட்டலுக்கு அனுமதி கோரி, கடலோர ஆணையத்தில் விண்ணப்பித்து உள்ளோம் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி ஓட்டலை மாநகராட்சி இடிக்க 2 நாட்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Sonu sood