நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையில் புரளி என தகவல்

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையில் புரளி என தகவல்
அஜித்குமார்
  • Share this:
நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்க இருப்பதாக மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். அவருக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வெடி குண்டு வெடிக்க இருப்பதாக மர்ம நபர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.


விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் தொலைப்பேசியில் அழைத்தது தெரியவந்தது. இவர் ஏற்கெனவே நடிகர் விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்திருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையை முடித்துக்கொண்டனர்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading