சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல்

சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல்

சூர்யா

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

 • Share this:
  ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, இயக்குநர் ஹரியுடன் ‘அருவா’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் திரைப்பட படப்பிடிப்புகள் இன்னும் முழுமையாக தொடங்கப்படாத நிலையில் சூர்யா புதிதாக படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

  இதனிடையே ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா வெளியிட்ட அறிக்கை விவாதப் பொருளாகி பாஜகவினர் கடுமையான எதிர்ப்பும் தெரிவித்தனர்.

  இந்நிலையில் ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி 2வது தெருவில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் இன்று மதியம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் கால் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.  இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் துறையினர் மற்றும் மோப்பநாய் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்ட போது அந்த இடத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை சூர்யா கடந்த 6 மாதத்திற்கு முன்பாகவே அடையாறுக்கு மாற்றி விட்டார் என தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் போலியானது எனவும் தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Published by:Sheik Hanifah
  First published: