கார் விபத்து - பிரபல பாடகரின் மகன் கைது

news18
Updated: March 13, 2018, 3:30 PM IST
கார் விபத்து - பிரபல பாடகரின் மகன் கைது
ஆதித்ய நாராயணன் - பாடகர்
news18
Updated: March 13, 2018, 3:30 PM IST
பிரபல பாடகர் உதித் நாராயணனின் மகன் ஆதித்ய நாராயணன்  கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த பிரபல பாடகரான உதித் நாராயணன், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மகனான ஆதித்ய நாராயணனும் பாடகராவார். ஆதித்ய நாராயணன், மும்பை லோகந்த்வாலா பேக் ரோடு பகுதியில் தனது சொகுசு காரை ஓட்டிச் சென்றபோது ஒரு ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும், பெண் பயணி ஒருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் அந்த பெண்ணின் கால் எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரில் அதிவேகமாக காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக, ஆதித்ய நாராயணை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆதித்ய நாராயண் காரில் வேகமாகச் சென்றதோடு மட்டுமில்லாமல் தவறான இடத்தில் காரை வேகமாக திருப்பும் போது நிலை தடுமாறி ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். அதன் பின் காயமடைந்த பெண்ணை உதித் நாராயண்,  திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்” எனப் போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதையடுத்து10,000 ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர், ஆதித்ய நாராயணை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்