ஏக்-தோ-தீன், ஹவா-ஹவா போன்ற புகழ்பெற்ற நடனங்கள் நினைவிருக்கிறதா? பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார்
பாலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார்.

நடன இயக்குநர் சரோஜ் கான்
- News18 Tamil
- Last Updated: July 3, 2020, 12:23 PM IST
பாலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார்.
பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 71. இந்நிலையில், மும்பை பந்த்ராவில் உள்ள மருத்துவமனையில் சுவாசக் குறைபாடால் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
சுவாசக் கோளாறுக்கான சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சரோஜ்கான் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு மும்பை மாலட் பகுதியில் நடைபெற்றது. சரோஜ் கான் தனது 13 வயதில் நடன இயக்குநர் சோஹன் லாலை திருமணம் செய்து கொண்டார். கணவரிடம் இருந்து நடனத்தை கற்றுக் கொண்ட சரோஜ் கான் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றினார்.
மாதிரி தீட்சித், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெரும்பாலான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ள சரோஜ்கான், மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.Also read... நடிகை பானுமதியின் பெயரில் உருவான படத்திற்கு பெயர் மாற்றம்... வழக்கு முடித்து வைப்பு!
ஆத்தாடி மனசுதான் ரெக்க கட்டி பறக்குதே... பிந்து மாதவியின் நியூ ஆல்பம்!
பாலிவுட்டில் புகழ்பெற்ற ஏக் தோ தீன், தாக் தாக், ஹவா ஹவா, தம்மா தம்மா போன்ற பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் சரோஜ் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 71. இந்நிலையில், மும்பை பந்த்ராவில் உள்ள மருத்துவமனையில் சுவாசக் குறைபாடால் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
சுவாசக் கோளாறுக்கான சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சரோஜ்கான் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு மும்பை மாலட் பகுதியில் நடைபெற்றது.