Yami Gautam: பிரபல நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது ஏன்?

யாமி கவுதம்,

தமிழில் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் 2013ம் ஆண்டு வெளிவந்த கவுரவம் மற்றும் 2016ல் நடிகர் ஜெய்யுடன் ஜோடியாக தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்திலும் நடித்திருக்கிறார் யாமி கவுதம்.

  • Share this:
தென்னிந்திய மற்றும் இந்திய படங்களில் நடித்து புகழ்பெற்ற யாமி கவுதமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

FEMA எனப்படும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை (Foreign Exchange Management Act) மீறியதாக அமலாக்கத்துறையினர் பாலிவுட் நடிகை யாமி கவுதமுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

2009ம் ஆண்டு கன்னட படம் ஒன்றில் அறிமுகமான நடிகை யாமி கவுதம் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 32. இவர் கன்னடம், இந்தி, பஞ்சாபி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் 2013ம் ஆண்டு வெளிவந்த கவுரவம் மற்றும் 2016ல் நடிகர் ஜெய்யுடன் ஜோடியாக தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்திலும் நடித்திருக்கிறார் யாமி கவுதம்.

தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்


Also Read:    'மினி பாகிஸ்தான்' என ஃபேஸ்புக்கில் சர்ச்சை பதிவு: லைக்ஸுக்காக இளைஞர் செய்த விபரீதம்!

நடிகை யாமி கவுதமின் வங்கிக் கணக்கில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும், அவருடைய கணக்கில் 1.5 கோடி ரூபாய் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியிருக்கிறது. இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் அவர் அமலாக்கத்துறையின் அலுவலகத்திற்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஒரு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராஜவில்லை எனவும் தெரியவந்திருக்கிறது. எனவே இந்த முறை அவர் ஆஜராகவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கியிருக்கும் நடிகை யாமி கவுதம், கடந்த ஜூன் மாதம் திடீரென திருமணம் செய்து அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

Also Read:  மைனர் சிறுமிகள் உட்பட மூவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான அவலம்: அதிரவைக்கும் உத்தரப்பிரதேசம்!

2016ம் ஆண்டு நடைபெற்ற உரி தாக்குதலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உரி தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக பரிணமித்த ஆதித்யா தர்-ஐ கடந்த ஜூன் மாதத்தில் கரம்பிடித்த யாமி கவுதம், திருமணத்திற்கு பின்னதாக தன்னுடைய திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். உரி படத்தில் யாமி கவுதமும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2012ல் வெளியான சூப்பர் ஹிட் பாலிவுட் திரைப்படமான விக்கி டோனர், பத்லாபூர், ஹிருத்திக் ரோஷனுடன் காபில், ஆயுஷ்மன் குரானாவுடன் பாலா ஆகிய படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் சைஃப் அலிகானுடன் Bhoot Police, Faraar, அபிஷேக் பச்சனுடன் Dasvi உட்பட 5 திரைப்படங்கள் உள்ளன.
Published by:Arun
First published: