சர்ச்சை பதிவிட்ட பாலிவுட் நடிகர் அதிரடியாக கைது!

”இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஜாஸ் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டவர்”

”இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஜாஸ் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டவர்”

 • Share this:
  தனது சமூகவலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஜாஸ் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டவர். கடந்த 2018-ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட அஜாஸ் கான், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரு சமூகத்தினரிடையே வெறுப்பை விதைக்கும் விதமாக வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டதாக அந்த சமயத்தில் போலீசார் தெரிவித்தனர்.

  இந்நிலையில் தற்போது மீண்டும் சர்சைக்குரிய கருத்துகளை தனது ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் தெரிவித்ததாகக் கூறி மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வீட்டிலிருக்கும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் வெளியிட்ட சர்ச்சை வீடியோவால் அவர் தற்போது கைதாகியுள்ளார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sheik Hanifah
  First published: