பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: ஓவியா மீது பாஜக போலீசில் புகார்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: ஓவியா மீது பாஜக போலீசில் புகார்

ஓவியா | பிரதமர் மோடி

பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருத்து பதிவிட்ட நடிகை ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் சிபிசிஐடி சைபர் கிரைமில் புகாரளித்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வருகை தந்திருந்தார். அவரது தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கை எதிர்ப்பாளர்கள் ட்ரெண்ட் செய்தனர்.

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஓவியாவும் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு நேற்று முன் தினம் மதியம் ட்வீட் செய்தார். அரசியல் குறித்து இதுவரை எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நடிகை ஓவியா மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தது ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் சுதாகர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, “பிரதமர் மோடி இந்தியாவின் இறையாண்மையை காப்பதில் முக்கியமான பங்கு உடையவர். பிரதமர் தமிழகம் வரும்போது சமூக வலைதளத்தில் ‘கோ பேக் மோடி’ என கருத்தை பதவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தூண்டிவிடும் செயலில் நடிகை ஓவியா ஈடுபடுவதாகவும், இறையாண்மையை கெடுக்கும் வகையில் நடிகை ஓவியா செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பிரதமரை அவமதிக்கும் வகையிலும் இறையாண்மையை கெடுக்கும் வகையில் செயல்படும் நடிகை ஓவியாவின் நடவடிக்கை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நடிகை ஓவியாவிற்கு பின்புலத்தில் இருப்பது யார் என சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும். அவரது சமூக வலைதள பக்கத்தை முடக்க வேண்டும். அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்ய வேண்டும். நடிகை ஓவியாவின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் கூறியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: