ஆஸ்கர் இறுதிப் போட்டி பட்டியலில் இந்திய குறும்படம்!

ஆஸ்கர் இறுதிப் போட்டி பட்டியலில் இந்திய குறும்படம்!

பிட்டூ

ஆஸ்கர் விருதை வெல்ல மற்றுமொரு இந்திய படத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 • Share this:
  சினிமா துறையில் அளிக்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதுப் போட்டியிலிருந்து இந்திய மலையாளப் படமான ஜல்லிக்கட்டு வெளியேறியது சினிமா ஆர்வலர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் ஆஸ்கர் விருதை வெல்ல மற்றுமொரு இந்திய படத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

  கரிஷ்மா தேவ் துபே இயக்கியுள்ள இந்திய குறும்படமான "பிட்டூ" இறுதி பத்து படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தை ஏக்தா கபூர், குணீத் மோங்கா மற்றும் தஹிரா காஷ்யப் ஆகியோர் தயாரித்துள்ளனர். இரு பள்ளி தோழிகள் பற்றிய கதையே இந்த படம். பிட்டூ குறும்பட குழுவினருக்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25-ந்தேதி நடக்கிறது.

  ஒரு வழியாக ’வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்! மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

  தவிர, ‘டா யீ’, ’ஃபீலிங் த்ரூ’, ’தி ஹ்யூமன் வாய்ஸ்’, ’தி கிக்ஸ்லெட் கொயர்’, ’தி லெட்டர் ரூம்’, ’தி பிரசண்ட்’, ’டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’, ’தி வேன்’ மற்றும் ’ஒயிட் ஐ’ ஆகியப் படங்களும் ஆஸ்கர் விருதுகளுக்கான குறும்படங்களின் இறுதிப்பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: