• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • போஸ்டர், வீடியோ வெளியிட்டு சூர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தயாரிப்பு நிறுவனங்கள்

போஸ்டர், வீடியோ வெளியிட்டு சூர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தயாரிப்பு நிறுவனங்கள்

காப்பான்

காப்பான்

சூர்யாவுக்கு தமிழகம் தாண்டி கேரளா, கர்நாடக, தெலங்கான ஆகிய மாவட்டங்களிலும் ரசிகர் பட்டாளம் அதிகம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    ‘நேருக்கு நேர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூர்யாவுக்கு இன்று 44-வது பிறந்தநாள். ஆரம்பத்தில் நடித்த படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்வில்லை. பிறகு பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா பாடம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து மெளனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், பேரழகன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக் கொடுத்தது.

    இதையடுத்து வெளியான கஜினி, அயன், சிங்கம், 24 ஆகிய படங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் சூர்யாவுக்கு கேரளா, கர்நாடக, தெலங்கான ஆகிய மாவட்டங்களிலும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார் சூர்யா. சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக காப்பான் படத்தின் பாடல்கள் 21-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சூர்யாவுக்கு திரைபிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

    லைகா நிறுவனம் சூர்யாவுக்கு பிறந்தநாள் பரிசாக காப்பான் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது



    இதேபோல் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், ' ஒரு வெற்றியோடு நின்றுவிடக்கூடாது தொடர்ந்து ஓட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தது நீங்கள் தான். எங்களை ஊக்கப்படுத்திய உங்களுக்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா’ என்று தெரிவித்துள்ளது



    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: