'எங்களுக்கு தை மாசம் பொறந்தாச்சு...2021-ல் ரஜினி ஆட்சி தான்' உற்சாகத்தில் உள்ளோம் - ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ்

'எங்களுக்கு தை மாசம் பொறந்தாச்சு...2021-ல் ரஜினி ஆட்சி தான்' உற்சாகத்தில் உள்ளோம் - ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ்

பிஜிலி ரமேஷ்

இன்றைய நாள் தான் ரஜினி ரசிகர்களுக்கு தை மாதம் என ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ் கூறியுள்ளார்.

 • Share this:
  தமிழ் திரையுலகிற்கு சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பிஜிலி ரமேஷ் இன்றைய நாள் தான் ரஜினி ரசிகர்களுக்கு தை மாதம் என கூறியுள்ளார்.

  இது குறித்து பேசிய அவர், எங்கள் மனது எங்களிடம் இல்லை. எங்கள் மனதை அவரிடம் கொடுத்துள்ளோம். மிக மிக மகிழ்ச்சியாக ரஜினி ரசிகர்கள் உள்ளோம். குடும்பம் குடும்பமாக நாங்கள் சந்தோசத்தை கொண்டாடி வருகின்றோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். எங்களுக்கு இன்றே தை மாதம் பிறந்து விட்டது. 2021 ரஜினி ஆட்சி தான். எவ்வித மாற்றமும் இல்லை என கூறியுள்ளார்

  ஜனவரியில் கட்சித் துவங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு வெளியாகுமென நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ஜனவரியில் கட்சித் துவக்கம்,டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்று தெரிவித்துள்ளார்.

   


  வரப்போகின்ற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதசார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்...அதிசயம்...நிகழும்!!! என பதிவிட்டுள்ளார்.

  ALSO READ | ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி... யார் இவர்?

  இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்திருக்கும் அவர், தான் வென்றால் அது மக்களின் வெற்றியென்றும், தான் தோற்றால் அது மக்களின் தோல்வியென்றும் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி என்று ரஜினிகாந்த் தனது தேர்தல் பங்களிப்பை உறுதிசெய்து தெளிவுபடுத்தியுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Sankaravadivoo G
  First published: