Home /News /entertainment /

பிகில் படத்துக்கு தடைகோரி வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

பிகில் படத்துக்கு தடைகோரி வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

பிகில் திரைப்படத்தில் விஜய்

பிகில் திரைப்படத்தில் விஜய்

  • News18
  • Last Updated :
    பிகில் படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உயர்நீதிமனறம்

    தெறி, மெர்சல் படங்களை அடுத்து இயக்குநர் அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி கே.பி.செல்வா என்பவர் ஏற்கெனவே உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது இந்த விவகாரம் காப்புரிமை சம்பந்தப்பட்டது அதனால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் கே.பி.செல்வா, தற்போது  சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் கே.பி.செல்வா வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அட்லீ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் பணம்பறிப்பதற்காகவோ, விளம்பரத்துக்காகவோ இந்த வழக்கை தொடுக்கவில்லை என்று கே.பி.செல்வா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    இருதரப்பு வாதத்தைத்யும் கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

    வீடியோ பார்க்க: பிகில் ட்ரெய்லர்! சாதனைகளும்... சோதனைகளும்...

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Bigil

    அடுத்த செய்தி