Home » News » Entertainment » BIGIL AUDIO UPDATE AND TRP NEW RECORDS PV

பிகில் ஆடியோ ரிலீஸ், டிஆர்பியில் புது ரெக்கார்டு.. அப்டேட் தந்த தயாரிப்பாளர்

பிகில் ஆடியோ ரிலீஸ், டிஆர்பியில் புது ரெக்கார்டு.. அப்டேட் தந்த தயாரிப்பாளர்
  • News18
  • Last Updated: October 3, 2019, 2:42 PM IST
  • Share this:
பிகில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி 22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். முழுக்க முழுக்க பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் யூடியூப்பில் சக்கைபோடு போட்டு வருகிறது.


இந்நிலையில் படத்தின் பாடல்கள் வரும் 19-ம் தேதி வெளியாகும் என்றும் அதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து தற்போது பாடல்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் 22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



First published: September 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading