BIGIL AUDIO LAUNCH : எவன எங்க உட்கார வெக்கனுமோ அவன அங்க உட்கார வெச்சா எல்லாம் நல்லா இருக்கும் - விஜய்

  • | September 19, 2019, 23:36 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    23:39 (IST)

    பிகில் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டன.

    23:14 (IST)

    ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் கருணாநிதி குறித்து அமைச்சர் ஒருவர் தவறாக பேசி உள்ளார்கள். அந்த அமைச்சரை எம்.ஜி.ஆர் காரில் இருந்து வெளியேற்றினார். எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் - நடிகர் விஜய்

    23:2 (IST)

    என் ரசிகர்கள் எவ்வளவு ஆசைகளோட கனவோட சிரமத்தில் பேனர்லாம் வைக்குறாங்க.. அதை கிழிச்சா அவங்களுக்கு கோபம் வருவது நியாயம் தான்! அதற்காக அவர்கள் மீது கை வைக்காதீங்க. இது வேண்டுகோள்!- நடிகர் விஜய்

    22:57 (IST)

    விஜய்: பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல். இது போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ்டேக் போடுங்க.. சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க 

    22:55 (IST)

    விஜய்: விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க - 
    எதனை யாரால் முடிக்க முடியும் என பார்த்து எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமை வெச்சு முடிவு பண்ணுங்க

    22:51 (IST)

    இணைய மோதலில் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை கூறியுள்ளார்.

    22:50 (IST)

    விஜய்: இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில்  யாரை கைது பண்ணனுமோ அவங்களை விட்றாங்க.. பிரிண்டர்ஸ பிடிக்கிறாங்க.. யார் மேல கோவ படணுமோ அவங்கள விட்டுட்டு லாரி டிரைவரை பிடிக்கிறாங்க.. இதை எல்லாம் ட்விட்டரில் டிரெண்ட் பன்னுங்க

    22:45 (IST)

    விஜய்: எவன எங்க உட்கார வெக்கனுமோ அவன் அங்க உட்கார வெச்சா எல்லாம் நல்லா இருக்கும்

    விஜய்: வாழ்க்கையும் ஒரு ஃபுட் பால் கேம் மாதிரி தான்.. நம்ம கோலை தடுக்க ஒரு கூட்டம் வரும். நம்ம கூட இருக்கிறவனே சேம் சைட் கோல் போடுவான். யாரோட அடையாளத்தை எடுத்துக்காதீங்க.. உங்களுக்கான அடையாளத்த உருவாக்குங்க

    22:44 (IST)