HOME»NEWS»ENTERTAINMENT»bigil actress praised bigg boss som sekhar reba monika john scs

பிக் பாஸ் சோமை நினைத்து பெருமைப்பட்ட விஜய் பட நடிகை!

சோமும் ரெபாவும் இணைந்து விளம்பரப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் சோமை நினைத்து பெருமைப்பட்ட விஜய் பட நடிகை!
சோம் சேகர்
  • Share this:

பிக் பாஸ் சோமை நினைத்து பெருமைப்படுவதாக விஜய் பட நடிகை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த வாரம் நடந்தது. 100 நாட்களைக் கடந்து பிக் பாஸ் வீட்டில் இருந்த ஆரி, பாலா, சோம், ரம்யா பாண்டியன், ரியோ ஆகிய 5 பேரும் இறுதிப் போட்டியாளர்களாக இடம் பிடித்தனர்.

இதில் ஆரி பிக் பாஸ் வின்னராக டைட்டிலை வென்றார். பாலா ரன்னராக அறிவிக்கப்பட்டார். இதில் சோம் சேகருக்கு 5-ம் இடம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஆதரவளித்த ரசிகரக்ளுக்கு சமூகவலைதளங்களில் நன்றி தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சோம் சேகர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் தனக்கு வாக்களித்து, இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி கூறினார். அதோடு விரைவில் லைவ்வில் அனைவரிடமும் பேச உள்ளதாகவும் கூறினார்.



Bigg Boss Som Sekhar, Bigil reba john

அந்த வீடியோவுக்கு பல்வேறு கமெண்ட்டுகள் பதிவான நிலையில் ’பிகில்’ படத்தில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான் ’உன்னை நினைத்தால் எனக்கு பெருமையா இருக்கு டா’ என்று பதிவு செய்துள்ளார். இவர்கள் ஏற்கனவே நண்பர்களா என ஆராய்ந்ததில், சோமும் ரெபாவும் இணைந்து விளம்பரப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட நட்பு இப்போது வரை தொடர்வது தெரிய வந்துள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: