• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அய்யய்யோ.. தெரிஞ்சிருச்சா மொமெண்ட்.. பிரியங்காவை கலாய்த்த கமல்ஹாசன்..

அய்யய்யோ.. தெரிஞ்சிருச்சா மொமெண்ட்.. பிரியங்காவை கலாய்த்த கமல்ஹாசன்..

பிரியங்கா- கமல்ஹாசன்

பிரியங்கா- கமல்ஹாசன்

Bigg Boss Tamil Season 5: Day (7)Review : வருணிடம் வெளியே காட்டுன மேஜிக்கை உள்ளே காட்டுங்க, சிபியிடம் நல்ல டீ போடுறீங்க இப்படி அவர்களை மோட்டிவேட் செய்யும் விதமாக கமல் பேசினார்.

  • Share this:
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் கமல்ஹாசன் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடம் பிளாஸ்மா டிவி மூலம் உரையாடுவார். நேற்று வெள்ளிக்கிழமை எபிசோட் ஒளிபரப்பாததால் கமல்ஹாசன் மற்றும் ஹவுஸ் மேட்ஸ் வழக்கத்தை விட நீண்ட நேரம் உரையாடினார்கள்.

    ‘வீட்டிற்குள் இருந்தவர்களும் சரி, பார்த்து கொண்டிருந்தவர்களும் சரி, நானும் சரி நமீதாவிடம் மனதை பறிக்கொடுத்துள்ளோம்’. ஆனால் அவர் தவிர்க்க முடியாத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறினார் என்று கூறிப்படி நிகழ்ச்சியை தொடங்கினார் கமல்.அகம் டிவி இல்லாமல் உங்களை ரெகுலர் டிவியிலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறி வீட்டில் உள்ள ஒவ்வொருவர் பற்றியும் பேச தொடங்கினார்.



    ‘வல்லவனுக்கு புல்லு ஆயுதம் என்பது மாதிரி வீட்டில் உள்ள அம்மி குழவியலாம் வச்சி உடற்பயிற்சி செய்யும் நீரூப்பிற்கு வாழ்த்துக்கள்’என்றுக் கூறி நிரூப்பை வாழ்த்தினார்.சமையல் கருவி மூலமாக சுடச்சுட செய்திகள் சொல்லலாம் என்பதை கண்டுபிடித்த ப்ரியங்கா என்று கமல் கூப்பிட, ப்ரியங்காவோ சார் அது ஒரு communication தான் சார் என்று சொல்ல, அந்த உரையாடல் சிரிப்புடன் முடிந்தது.

    also read : பிக்பாஸ் வீட்டிலிருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கு இது தான் காரணம்..



    மதுமிதாவின் தமிழ் பிடித்திருப்பதாகவும் தொடர்ந்து பேசுமாரும் கேட்டுக்கொண்டார். அதே போல் சின்னத்திரையில் முதன்முறையாக பாவனி தனது சொந்த குரலில் பேசுகிறார் என்று அவரை பாராட்டினார். வருணிடம் வெளியே காட்டுன மேஜிக்கை உள்ளே காட்டுங்க, சிபியிடம் நல்ல டீ போடுறீங்க இப்படி அவர்களை மோட்டிவேட் செய்யும் விதமாக கமல் பேசினார்.

    also read : பாவனி ரெட்டிக்கு இரண்டாவது திருமணம் நடந்ததா ? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பாவனி ரெட்டியின் சகோதரி



    அடுத்து, கதை சொல்லும் டாஸ்கில் சின்னப்பொண்ணுவிற்கு ராஜு டிஸ் லைக் கொடுத்த டாபிக்கை பற்றி கேட்க, உடனே சின்னப்பொண்ணு நான் தான் சரியா கதையை முடிக்கலன்னு மீண்டும் அந்த கதையை சொல்ல தொடங்கினார்.டாஸ்க்கில் ராஜுவிடம் டிஸ் லைக் வாங்குன சின்னப்பொண்ணு நேற்றைய எபிசோடில் மீண்டும் தனது கதையை சுவாரஸ்யமாக கூறி அனைவரின் மனதையும் வென்றுவிட்டார். ஆம். ராஜுவின் மனதையும் தான்..

    நேற்றைய எபிசோட் கமலுடன் உரையாடியப்படியே முடிந்த நிலையில், இன்று சுவாரஸ்யமான சம்பவங்கள் எதுவும் நடக்குமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

     

     

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: