• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நீ பேசுறதுல சென்ஸே இல்ல..விடுடா.. திடீரென வெடித்த நிரூப்,சிபி விவாதம்.. உண்மையிலேயே என்ன தான் பிரச்சனை?

நீ பேசுறதுல சென்ஸே இல்ல..விடுடா.. திடீரென வெடித்த நிரூப்,சிபி விவாதம்.. உண்மையிலேயே என்ன தான் பிரச்சனை?

நிரூப் - சிபி

நிரூப் - சிபி

உனக்கு சிரிக்க தோணுச்சுல, அந்த மாதிரி அவனுக்கு உச்சுனு சொல்ல தோனிருக்கு, இன்னொருத்தன் எழுந்து போனும்னு நினைச்சா எழுந்து போவான்.

  • Share this:
    பிக்பாஸ் வீட்டில் சந்தோஷம் நினைவுகளை விட எல்லா சீசன்களிலும் சண்டையே அதிகமாக இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த சீசன் அதை முறியடிக்கும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், வீட்டில் உள்ளவர்கள் கதை சொல்லும் டாஸ்க் விளையாடி வருகின்றனர்.இந்த டாஸ்கில் அனைவரும் தங்களின் கதையை மற்றவர்களை கவரும் வகையில் வெளிப்படுத்த வேண்டும்.இசைவாணி, சின்னப்பொண்ணு, சுருதி, இமான் அண்ணாச்சி ஆகியோர் தங்களின் சாதனை கதையை ஹவுஸ் மேட்ஸுடன் பகிர்ந்துக்கொண்டனர்.

    இந்நிலையில் நேற்று இமான் அண்ணாச்சி இந்த பிக்பாஸ் வாய்ப்பு எப்படி கிடைத்தது எனவும், வாழ்க்கையில் எப்படி ஜெயிச்சேன் என்பதை பற்றியும் மிகவும் நகைச்சுவையாக கூறினார். அவரின் நகைச்சுவைக்கு ப்ரியங்கா, சின்னப்பொண்ணு மற்றும் அக்‌ஷரா, சுருதி என பலரும் சத்தமாக வாய்விட்டு சிரித்தனர். அப்படி வாய்விட்டு சிரிக்கும் சத்தத்தினால், அபிஷேக் கதையை ஒழுங்காக கேட்க முடியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இமான் அண்ணாச்சி பேசியதற்கு லைக்ஸ், டிஸ் லைக்ஸ் மற்றும் ஹார்ட் சிம்பள் கொடுக்கப்பட்டது. அதில் அபிநய், நமிதா, நதியா சங், சிபி மற்றும் அபிஷேக் டிஸ் லைக்ஸ் சிம்பள் கொடுத்திருந்தனர்.



    இமான் அண்ணாச்சி டிஸ் லைக்ஸ் கொடுத்தவர்களிடம் காரணத்தை கேட்க, அபிநய் ‘நீங்க இன்னும் கூட உங்க கஷ்டத்த சொல்லிருந்தா அதுல நான் நிறைய கத்திருப்பேன் அதனால டிஸ் லைக்ஸ் கொடுத்தேன்’ என்றார்.நமிதா சினிமா கதை போல் இருந்தது என்று கூறினார். நடியா எனக்கு இதுக்கு ரீசன் சொல்ல தோணல என்று பளிச்சீன்னு சொல்லிவிட, அபிஷேக்கும் ஒரு பக்கம் இருந்துக்கொண்டு சிபியும் காரணம் சொல்லமாட்டான் என்று கத்த, இமான் அண்ணாச்சி நன்றி என்று சொல்லிவிட்டு அமர்ந்த பின்பு தான் சிபி மற்று நிரூப் இடையே விவாதம் தொடங்கியது.



     

    அதாவது அபிஷேக் இமான் அண்ணாச்சியின் பேச்சை ஒழுங்கா கவனிக்கமுடியாமல் இருக்க போய், உச்சனு சொல்ல, அந்த நேரத்துல நிரூப்பும் சிரிக்க , அப்ப காமெடி பண்ணா சிரிக்க கூடாதான்னு நிரூப் கேட்கிறார். இதில் உண்மையில் சிபி மற்றும் நிரூபிடையே எந்த சண்டையும் இல்லை.அபிஷேக்கிற்காக சிபி பேசுகிறார். ‘உனக்கு சிரிக்க தோணுச்சுல, அந்த மாதிரி அவனுக்கு உச்சுனு சொல்ல தோனிருக்கு, இன்னொருத்தன் எழுந்து போனும்னு நினைச்சா எழுந்து போவான் என சிபி கூற, நீ சொல்றதுல்ல சென்ஸே இல்ல,எனக்கு சத்தியமா புரியல சரி விடுடான்னு நிரூப் சொல்ல, ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒன்னும் தெரியாமல் முழிக்கின்றனர்.

    also read :  மாடல் சுருதியின் வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டமா.. கதையை கேட்டு அழுத பிரியங்கா..



    உடனே நிரூப் அண்ணாச்சியை கூப்பிட்டு நீங்க பேசுறப்ப நான் சிரிச்சது தப்பான்னு கேட்க, அண்ணாச்சி உடனே‘நான் சொன்னது என் கதையே இல்ல நான் சொன்னது வானத்தை போல படத்தின் கதை.இப்படி முடிஞ்சி போச்சா சண்டை’என்று சொல்ல ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் சிரிக்க தொடங்கினர். இது ஒரு காராசாரமே இல்லாத சண்டை என்பது தான் உண்மை..

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: