• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • மாடல் சுருதியின் வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டமா.. கதையை கேட்டு அழுத பிரியங்கா..

மாடல் சுருதியின் வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டமா.. கதையை கேட்டு அழுத பிரியங்கா..

சுருதி - பிரியங்கா

சுருதி - பிரியங்கா

வார்த்தை வாயிலிருந்து வருவதற்கு முன்னே கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது.

 • Share this:
  பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் போட்டியாளராக பங்கேற்றிந்தனர். அந்த சீசன் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.எனவே பிக்பாஸ் சீசன் 5 மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தெரியாத முகங்களே போட்டியாளராக பங்கேற்றுள்ளனர்.விஜய் டிவி பிரியங்கா, இமான் அண்ணாச்சி, சின்னப் பொண்ணு, மாஸ்டர் படத்தில் நடித்த சிபி ஆகியோர் மட்டும் தான் ஏற்கனவே பிரபலமானவர்கள்.

  பிக்பாஸ் வீட்டில் பிரலமானவர்கள், பிரபலம் இல்லாதவர்கள் என்பதெல்லாம் கணக்கே இல்லை. அனைவரும் சமம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில், தான் யார் என்று மற்றவர்களிடம் கதையாக சொல்லக்கூடிய டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. ஒருவர் சொல்லும் கதை பிடித்திருந்தால் தம்ஸ் அப் சிம்பள்( thumbs up), மனதை கவரவில்லைஎன்றால் தம்ஸ் டவுன்( thumbs down) சிம்பள் கொடுக்கலாம், அந்த கதை மிகவும் பிடிந்திருந்தால் ஹார்ட் சிம்பள் ( Heart) கொடுக்கலாம்.

  இந்த டாஸ்க்கில் முதலில் இசைவாணி தன்னுடையை கதையை பகிர்ந்துக்கொண்டார்.கதையை கேட்டு அனைவரும் பாராட்டிய நிலையில், டாஸ்க் முடிந்த பின் ராஜு, இசைவாணியிடம் தனியாக தனது கருத்தினை பகிர்ந்துக்கொண்டார். ‘உங்க கதை எனக்கு ரொம்ப பிடிச்சது, ஆனா சொல்ற விதம் கொஞ்சம் மாத்தி சொல்லியிருக்கலாம் தோணுது.நம்ம கஷ்டப்பட்டு மேல வந்துருக்கோம் அப்படிங்கிறத மத்தவங்கள இன்ஸ்பையர் பண்ற மாதிரி சொன்னா இன்னும் நல்லாயிருக்கும்’ என்று பக்குவாகமாக சொல்ல இசைவாணியும், சிரித்துக்கொண்டே அடுத்த முறை பாருங்க எப்படி சொல்லுறன்னு என்று கூறினார்.

  இசைவாணியை தொடர்ந்து சின்னப்பொண்ணு தனது கதையைக் கூற அனைவரும் தம்ஸ் அப் மற்றும் ஹார்ட் சிம்பள் கொடுத்தனர். ஆனால் ராஜு மட்டும் தம்ஸ் டவுன் சிம்பள் கொடுத்து ‘எல்லாரும் சப்போர்ட் பண்ணா எப்படி, நீங்க இன்னும் முன்னேறுவீங்க. ஒரு தடை வேணும்ல. அந்த சுவரா நான் இருக்க விரும்புறேன் என்று கூற, சின்னப்பொண்ணும் சரி தம்பி என்று சொல்ல அந்த நாள் பிரியங்காவின் சில காமெடியுடன் முடிந்தது.  மறுநாள் இந்த டாஸ்க்கில் இமான் அண்ணாச்சி சிரித்துக்கொண்டே தனது கஷ்டத்தை பகிர்ந்துக்கொள்கிறார். இமான் அண்ணாச்சியின் கதையை கேட்டு அக்‌ஷரா விழுந்து விழுந்து சிரிக்கிறார். கதை முடிந்தபின் ஹவுஸ் மேட்ஸ் தங்களுக்கு தோன்றிய சிம்பளை அங்கியிருக்கும் பலகையில் வைக்கின்றனர். அதில் தம்ஸ் டவுன் அதாவது டிஸ்லைக்ஸ் சிம்பள் வைத்தவர்களிடம் மட்டும் அண்ணாச்சி ஏன் என காரணம் கேட்க, நமிதா சட்டென்று சினிமா கதை போல் இருக்கிறது என்று சொல்ல, ஒரு பக்கம் காரணமே இல்லாமல் சிபியும், நிரூப்பும் பேசிக்கொண்டிருந்தனர். நம்மை போல ஹவுஸ் மேட்ஸுக்கும் ஒன்னும் புரியவில்லை என்பது தான் உண்மை.

  also read : பெருசு.. நைட்டி திருடன்.. கொளுத்தி! பிரியங்காகிட்ட இருந்து பிக் பாஸ் நிறைய கத்துக்கணும்!  அண்ணாச்சி பேசிக்கொண்டிருக்கும் போது, நிரூப் சிரித்துள்ளார், அபிஷேக் உச் என்று சொல்ல, இதை அபிஷேக் கேக்க,அதற்கு சிபியோ நிரூப்பிடம் ‘ நீ ஏன் சிரிச்சனு நாங்க கேக்கல, அதே மாதிரி ஏன் உச்சுனு சொன்னான்னு கேக்காதா’ என்று கூற, நிரூப்போ எப்பா எனக்கு இது புரியலப்பா என்று சொல்லிவிட்டு அமைதியாக அமந்துக்கொண்டார். பின்பு சூடாக இருக்கும் ஹவுஸ் மேட்ஸை சிரிக்க வைக்க அண்ணாச்சி, நான் சொன்னது என் கதையே இல்ல, வானத்தை போல கதை என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.  அடுத்து சுருதி கதை சொல்ல வருகிறார். வார்த்தை வாயிலிருந்து வருவதற்கு முன்னே கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது. ஆனால் கண்ணீரை முழங்கியப்படி தனது கதையை சொல்ல தொடங்கிறார். தனது குடும்பம், அம்மா, அப்பா பற்றி பேசும் போது எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பிரியங்காவே கண்கலங்கிவிட்டார். சுருதியின் கதைக்கு ஹவுஸ் மேட்ஸ் லைக்ஸ் மற்றும் ஹார்ட் சிம்பள் தான் கொடுத்திருந்தனர். ஒரு டிஸ் லைக்ஸ் கூட வாங்கவில்லை. கதையை சொல்லிவிட்டு கிழே இறங்கி அழுத சுருதிக்கு அனைவரும் ஆறுதல் கூறினார்கள்.

   

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: