• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: முதல் போட்டியாளராக பிபி ஹவுஸ் செல்லும் மிலா ? பிக்பாஸ் வீட்டிலிருந்து அவரே வெளியிட்ட புகைப்படம்..

Bigg Boss Tamil 5: முதல் போட்டியாளராக பிபி ஹவுஸ் செல்லும் மிலா ? பிக்பாஸ் வீட்டிலிருந்து அவரே வெளியிட்ட புகைப்படம்..

மிலா

மிலா

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

  • Share this:
    பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வரும் ஒரு நிகழ்ச்சியாகும். தமிழில்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசனும் வெற்றிகரமாக  நிறைவுப்பெற்ற நிலையில், 5வது சீசனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். செப்டம்பரில் பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆர்வத்தை அதிகரித்தது. அதிலிருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தன.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்பட்டு தான் பிபி வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இந்நிலையில் குக்கு வித் கோமாளி ஷகிலாவின் மகள் மிலா, செய்தி வாசிப்பாளர் கண்மணி, நடிகை ஷாலு , மிஸ்டர் இந்தியா கோபிநாத் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. எனவே இவர்கள் அனைவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக்கொள்ள உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஷகிலாவின் மகள் மிலா பிக்பாஸ் வீட்டிலிருக்கும் இருக்கும்படி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கேமிராவுக்கு முத்தம் கொடுக்கும்படி போஸ் கொடுத்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by @milla_babygal_official





    இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மிலாவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே , பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முதல் திருநங்கை என்ற பெருமையை மிலா பெற்றுள்ளார்.மேலும் நமிதா மாரிமுத்து என்ற மற்றொரு திருநங்கையும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் கலந்துக்கொள்கிறார் என்று தெரிந்துக்கொள்ள இன்று மாலை 6 மணி வரை நாம் காத்திருக்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: