Home » News » Entertainment » BIGGBOSS TAMIL 4 AAJEEDH QUESTIONS TO ARCHANA MSB

அர்ச்சனாவிடம் இதுவரை யாரும் கேட்காத கேள்வியைக் கேட்ட ஆஜித்

பிக்பாஸ் வீட்டின் சாணக்கியராக வலம் வரும் அர்ச்சனாவிடம் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டுமா அல்லது வீட்டுக்குச் செல்ல வேண்டுமா என பாடகர் ஆஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.

அர்ச்சனாவிடம் இதுவரை யாரும் கேட்காத கேள்வியைக் கேட்ட ஆஜித்
ஆஜித் - அர்ச்சனா
  • Share this:
58 நாட்களைக் கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டின் தலைவராக ஜித்தன் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் 9-வது வாரத்தின் நாமினேஷனும் நடந்து முடிந்துள்ளது.

அதில் ஷிவானி, ஆஜித், அனிதா, ரம்யா பாண்டியன், சனம், நிஷா மற்றும் ஆரி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால் சென்டர் டாஸ்க் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்  நடைபெற்ற கால் சென்டர் டாஸ்க்கில் ஊழியர்களாக இருந்தவர்கள் தற்போது வாடிக்கையாளர்களாக மாறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாடகர் ஆஜித், அர்ச்சனாவுக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது, "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போது ஒரு திறமையான போட்டியாளராக வந்தீர்கள். என்னுடைய நக்கலை நான் இன்னும் காட்டவில்லை என கமல் சாரிடம் கூறினீர்கள். ஆனால் வரும் போது நக்கல் பேச்சுகள் இருந்த நிலையில் இப்போது அது குறைந்துள்ளதாக எனக்கு தோன்றுகிறது.


அடிக்கடி வீட்டிற்கு போக வேண்டும் என கூறும் நீங்கள் டாஸ்க்குகளை சிறப்பாக செய்கிறீர்கள். உங்களுக்கு உண்மையில் வீட்டிற்கு செல்ல வேண்டுமா? அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டுமா?" என ஆஜித் அர்ச்சனாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுநாள் வரை பிக்பாஸ் வீட்டின் சாணக்கியராக வலம் வரும் அர்ச்சனாவிடம் ஆஜித் நேரடியாக இவ்வாறு கேள்வி எழுப்பியிருப்பது பிக்பாஸ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆஜித்தின் கேள்விகளுக்கு அர்ச்சனா என்ன பதிலளித்தார் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.



முன்னதாக வெளியான முதல் ப்ரமோவில் ஆரியிடம் போன் செய்து பேசிய பாலாஜி, நீங்கள் யாரையும் காலி செய்துவிட்டு விளையாட நினைக்கவில்லையா? என கேள்வி எழுப்பிய பாலாஜி, கெட்டவன் சொல்றான் பாருங்க அவனை நம்பலாம், நான் நல்லவன்னு சொல்றான் பாருங்க அவனை கூட நம்பலாம், அனால் நான் மட்டும் தான் நல்லவன்னு சொல்றான் பாருங்க அவனை மட்டும் நம்பவே கூடாது என்று கூறும் காட்சிகள் இருந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பாலாஜியின் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஆரி இணைப்பை துண்டித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading