Shivani Narayanan: பிக்பாஸ் ஷிவானி நாராயணன் வெளியிட்ட வித்தியாசமான வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வித்தியாசமானா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வித்தியாசமானா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    சின்னத்திரையில் பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இவருக்கு முதல் சீரியலிலே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து ரெட்டை ரோஜா சீரியலில் நடித்தார்.

    பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் அதிக ரசிகர்களை பெற்ற ஷிவானி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று தனது குழந்தை தனமான பேச்சின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

    இவர் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் followers உள்ளனர்.



    இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் தற்போது ஒரு வித்தியாசமான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷிவானி பதிவிட்டுள்ளார்.



    அந்த வீடியோவில், எந்த ஒரு சப்போர்டும் இல்லாமல்  தனது முழங்கையால் தரையை தொடுகிறார் ஷிவானி நாராயணன்.



    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: