Home /News /entertainment /

Cooku with Comali: குக் வித் கோமாளி சீசன்-3 நிகழ்ச்சியில் நுழையும் பிக்பாஸ் பிரபலம்?

Cooku with Comali: குக் வித் கோமாளி சீசன்-3 நிகழ்ச்சியில் நுழையும் பிக்பாஸ் பிரபலம்?

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

தென்னிந்திய சினிமாவில் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூப்பிட்டால் பங்கேற்பேன் என்று கூறியுள்ளார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்படும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கென தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். அதிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பேர் போன தொலைக்காட்சி என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இவர்கள் நடத்தும் அனைத்து ஷோக்களும் ஹிட் தான். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இப்போது வரை 2 சீசன்கள் கடந்துள்ள நிலையில், முதல் சீசனை காட்டிலும், 2வது சீசன் செம ஹிட் கொடுத்தது. மேலும், இந்த சீசன்களிலும் கலந்து கொண்ட குக் கண்டெண்ஸ்டண்ட் மற்றும் கோமாளிகள் என பலர் வெள்ளித்திரையில் கால்பதிக்க துவங்கியுள்ளனர். இந்த நிலையில், 3வது சீசனில் யார் பங்கேற்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3 வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கலாம் என சில செய்திகள் கசிந்தது. மேலும், இதில் ரக்‌ஷனுடன் இணைந்து மணிமேகலையும் ஆங்கரிங் செய்யபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Also Read: மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த்.?

குக் வித் கோமாளி இரு சீசன்களிலும் வந்த சில போட்டியாளர்கள் ஏற்கனவே பிக்பாஸில் கலந்து கொண்டது அனைவரும் அறிந்ததே. அதாவது, ரேகா, வனிதா, பாலாஜி என சில பிரபலங்கள் CWC முதல் சீசனில் கலந்துகொண்டிருந்தனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சனம்ஷெட்டி, குக் வித் கோமாளி சீசன் 3 இல் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

Photos : நடிகை ராஷி கன்னாவின் இதுவரை யாரும் பார்க்காத ஹாட் பிகினி புகைப்படங்கள்..

தென்னிந்திய சினிமாவில் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி, பிக் பாஸ் தமிழில் சமீபத்தில் முடிந்த 4வது சீசனில் பங்கு பெற்றவர். நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு இவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், தனது உறுதியான மற்றும் நிலையான பேச்சால் ரசிகர்களின் ஆதரவை குறுகிய நாட்களிலேயே பெற்றார். பின்னர் இவர் தான் டைட்டில் வின்னராவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இருப்பினும் ரசிகர்களின் ஆதரவை பெற்ற இவர் சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் தனது போலோயர்ஸ்களுடன் எப்போதும் தொடர்பு கொள்ளும் விதத்தில் #Asksanam என்ற ஹேஷ்டேக்குடன் அவரது ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

Must Read:அண்ணாத்த VS வலிமை - வெல்லப் போவது யாரு?

அதில் ஒரு யூசர், பிக் பாஸ் வீட்டில் அவர் தங்கியிருப்பது குறித்தும், சக போட்டியாளர்களால் கேலி செய்யப்படுவதை அவர் எவ்வாறு கையாண்டார் என்பது குறித்தும் கேட்டபோது, ​​"நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக எந்தவொரு வெற்றியும் இல்லாமல் போராடும் நடிகையாக இருந்தேன். எனவே அதைப் பெற பிக் பாஸுக்குச் சென்றேன். என் கடினமான காலங்களில் 'இது என் பொன்னான வாய்ப்பு. யாரையும் என்னை உடைக்க விடமாட்டேன். நான் எனக்காக இங்கே இருக்கிறேன்.. நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்' என்று என்னை நினைவுபடுத்திக்கொண்டேன்." என அவர் பதிலளித்திருந்தார்.

Photos : சிவப்பு நிற லெஹங்காவில் தேவதை போல் இருக்கும் மாளவிகா மோகனன் -போட்டோஸ்

இதையடுத்து மற்றொரு ரசிகர் "CWC சீசன் 3 -ல் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் செல்வீர்களா" என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு " ஒய் நாட்" என பதிலளித்துள்ளார். சனம் கொடுத்த பதில் மூலம், அவர் நிகழ்ச்சியில் பங்குபெற க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார் என்பது தெளிவானது. சூப்பர்ஹிட் சமையல் ரியாலிட்டி ஷோவில் அவரின் என்ட்ரி ரசிகர்களை காட்டாயம் உற்சாகப்படுத்தும். இருப்பினும், CWC சீசன் 3 தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவராததால், வரவிருக்கும் சீசனுக்கு அவர் அழைக்கப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி