Losliya : இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பாடிய பிக்பாஸ் லாஸ்லியா..

தேவா-லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா ஃபரண்ட்ஷிப் படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் தேவாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.

  • Share this:
நடிகை லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு ரசிகர்கள் ஆர்மி உருவானதை போல சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியாவை ரசிகர்கள் கொண்டாடினர் என்று கூறலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ’ஃபரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் லாஸ்லியா. அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஹர்பஜன் சிங், நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. கொரானாவால் தள்ளிப்போன இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதையடுத்து மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்படும் ‘கூகுள் குட்டப்பன்’என்ற படத்திலும் லாஸ்லியா நடித்து வருகிறார்.இந்த படத்தில் பிக்பாஸில் சக போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷனும் நடிக்கிறார்.

Also Read: கணவருடன் நெருக்கமாக வீடியோ வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..

இந்நிலையில் ஃப்ரண்டஷிப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து லாஸ்லியா பாடியுள்ளார்.


இந்த பாடல் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published: