அம்மன் அவதாரத்தில் நடிகை ரேகா.. பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்

நடிகை ரேகா அம்மன் அவதாரத்தில் எடுத்துள்ள ஃபோட்டோ ஷூட்டை திரைப்பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்

நடிகை ரேகா அம்மன் அவதாரத்தில் எடுத்துள்ள ஃபோட்டோ ஷூட்டை திரைப்பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்

 • Share this:
  ஆடி மாதத்தையொட்டி அம்மன் அவதாரத்தில் நடிகை ரேகா ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். வேப்பிலைக்காரி அவதாரத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களில் முழுமையாக வேப்பிலைக்காரியாகவே மாறியுள்ள ரேகா, ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளையும் விடுத்துள்ளார். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், அம்மனை வழிபடுவதோடு, வீடுகளில் வேப்பிலையை பயன்படுத்தி, தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

  தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதில் சிறந்த இயற்கை மருத்துவ குணம் கொண்ட இலை வேப்பிலை எனத் தெரிவித்துள்ள அவர், கிருமிகளை மட்டுமல்லாது மனதில் இருக்கும் நெகடிவ் எண்ணங்களையும் போக்க வல்லது என கூறியுள்ளார். நேர்மறை எண்ணங்களை உருவாக்கி மனதையும் வேப்பிலை தூய்மைப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.  நடிகை ரேகாவின் ஃபோட்டோ ஷூட்டை திரைப்பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர். ஷோபனா, பிக்பாஸ் ரம்யா உள்ளிட்டோர் ரேகாவின் அம்மன் அவதாரத்தை வெகுவாக புகழ்ந்துள்ளனர். 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக இருந்த ரேகா, கமல், சத்யராஜ், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் நடித்தார்.

  Also Read : டான் படத்தின் ஷூட்டிங் எங்க நடக்குது தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்  அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்ததால், கோலிவுட்டில் நட்சத்திர கதாநாயகி அந்தஸ்தைப் பெற்றார். பின்னர், சின்னத்திரையிலும் காலடி எடுத்துவைத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் லக்ஷிமியாக நடித்தார். விஜய் டிவியில் அண்மையில் நடைபெற்ற ‘கனா காணும் காலங்கள்’ ரீ யூனியன் நிகழ்ச்சியிலும், அந்த சீரியலில் நடித்தவர்களுடன் கலந்து கொண்டார்.  பிக்பாஸ் 4வது சீசனில் கலந்து கொண்டவர், பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். இருப்பினும் அந்த ஷோவுக்கு ஏற்ப விளையாட முடியாததால் ரசிகர்களின் ஆதரவை இழந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். பின்னர், சிறப்பு விருந்தினராக அந்த ஷோவில் சில நாட்கள் இருக்க வாய்ப்பளிக்கப்பட்டு, மீண்டும் கலந்து கொண்டார். அப்போது, தன்னுடைய வாழ்க்கை பயணத்தையும், திரை அனுபவங்கள், சவால்கள் என அனைத்தையும் வெளிப்படையாக கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார்.

  Also Read : பகத் பாசிலுக்கு க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நஸ்ரியா..   
   

   

   


  View this post on Instagram


   

   

   

   

  A post shared by Rekha Harris (@rekhaharris)

  ரேகாவின் வாழ்க்கை வரலாறைக் கேட்டு மக்கள் பலரும் கண்கலங்கினர். பிக் பாஸ் ஷோவுக்குப் பிறகு ‘குக் வித் கோமாளி’ ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது சில திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார். அவரின் லேட்டஸ்ட் அம்மன் அவதாரம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேகாவை லைம் லைட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: