தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு மூளையில் பிரச்சினை-திடீரென அறுவை சிகிச்சை!

அர்ச்சனா

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் இன்று திடீரென அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

  • Share this:
முன்னணித் தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவியில் ‘இளமை புதுமை’, ‘காமெடி டைம்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வேலை செய்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நான்காவது சீசனில் கலந்துகொண்டார்.

அங்கு அன்பு ஜெயிக்கும் என்று கூறி கொண்டே இருந்ததால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இவருக்கென ஒரு கூட்டம் இருந்ததால், குரூப்பிஸம் இருப்பதாக பலரும் விமர்சித்தனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு எதிர்ப்பாளர்கள் உருவாகினர். எனினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் நெகடிவ் விஷயங்களை தள்ளி வைத்து விட்டு தனது பணியை தொடங்கினார் அர்ச்சனா. யூடியூப், இன்ஸ்டாகிராமிலும் தனது மகளுடன் சேர்த்து வீடியோ ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் இவர் ஷேர் செய்த பாத்ரூம் டூர் வீடியோ பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் 'காதலே காதலே', 'ஓல்டு இஸ் கோல்டு' போன்ற சில முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் மிர்ச்சி எப்எம்மிலும் தொகுப்பாளர்களாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தான் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் இன்று அர்ச்சனாவுக்கு திடீரென அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரே செய்தி வெளியிட்டுள்ளார்.

 
மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ள அர்ச்சனா, அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார். அதில், ஹலோ எனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் குடும்பத்தினர்கள், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பதாக நம்புகிறேன். எப்போதும் இதயத்திலிருந்து இயங்கும் ஒரு பெண் நான். அதனால் என் மூளை கோபமடைந்து என் இதயத்தை விட அது வலிமையானது என்று எனக்குக் காட்ட விரும்பியுள்ளது. தற்போது அது ஒரு சிறிய பிரச்சினையைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. அது என் மண்டை ஓட்டை லேசாக பாதித்துள்ளது. அதில் இருக்கும் ஒரு சிறு துளையை நான் அடைக்க வேண்டியுள்ளது.

Also read : Sunday எந்த படம் பார்ப்பது என்று குழப்பமாக உள்ளதா? கவலைய விடுங்க.. சிறந்த திரைப்படங்கள், வெப் சீரிஸின் பட்டியல் இதோ..

இன்று எனக்கு ‘செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு’க்கான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் எனக்கு மூளை இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வேடிக்கையாக கூறியுள்ள அர்ச்சனா, இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது, அதன் பிறகு ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவேன். இதன் காரணமாக பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரத்தில் எனது மகள் சாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்பதை உறுதி கூறுகிறேன்.
இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடி நான் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாவும் மீண்டும் வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’, இன்றும் என்றும் உங்கள் அச்சுமா என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் விரைவில் மீண்டு வரவேண்டும் என தங்களது பிராத்தனைகளை தெரிவித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி விரைவில் நலம் பெற வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Tamilmalar Natarajan
First published: