முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Biggboss 4 Tamil | 'பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு’ - பிக்பாஸை குழப்பிய ரம்யா பாண்டியன்.. கலாய்த்து கமெண்ட்ரி வாசித்த அனிதா சம்பத்..

Biggboss 4 Tamil | 'பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு’ - பிக்பாஸை குழப்பிய ரம்யா பாண்டியன்.. கலாய்த்து கமெண்ட்ரி வாசித்த அனிதா சம்பத்..

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் வீட்டில் ரம்யா சேஃப் கேம் விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த ப்ரோமோவின் பெக்ரவுண்டில் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல் ஒலிப்பது தெரிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிக்பாஸ் நிகழ்ச்சியானது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வார நாமினேஷனில் ஆரி, அர்ச்சனா, ரியோ, ஆஜித், அனிதா, ஷிவானி, சோம் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில், இந்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் ரம்யா, பாலாஜி மற்றும் அர்ச்சனா பங்கேற்ற நிலையில் அதில் அர்ச்சனா வெற்றி பெற்றார். இதனால் அர்ச்சனா அடுத்த வார தலைவராவார். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் ரம்யாவை பிக் பாஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ரூமிற்கு அழைக்கிறார் . பிக் பாஸ் வீட்டில் உங்கள் வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பினார், எனக்கு யாரையாது பிடிக்கலைன்னா அந்த இடத்துலயே இருக்க மாட்டேன். 

கோவம் என்ற கேள்விக்கு, நான் எனக்கு எது சரின்னு தோணுதோ அதனை தான் செய்கிறேன் என்றார். அழுகை என்ற கேள்விக்கு இந்த வீட்டில் அழுகையில் உண்மை இருக்குறதும், பொய் இருக்குறதும் ரெண்டுமே பார்க்கலாம் என்று கூறுகிறார். சக ஹவுஸ் மேட்ஸ் குறித்து கேட்கையில் பதில் கூறாமல் சிரிக்கிறார். பின்னர் உங்க கிட்ட ஒன்னு கேட்கவா பிக் பாஸ் என்று கேட்கிறார் . 

அதற்கு பிக் பாஸ் , நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் முழுசா பதில் சொல்லையே என்று சொல்ல ரம்யா வழக்கம் போல சிரிக்கிறார். அதன் பின்னர் வெளியே வந்த ரம்யமாவிடம், பிக் பாஸை கன்ஃபியூஸ் செய்து அவரையும் சிரிக்க வைத்து வெளியே வந்திருக்கிறார் ரம்யா என்று செய்தி வாசிப்பது போல அனிதா கூறுவது காட்டப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் ரம்யா சேஃப் கேம் விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த ப்ரோமோவின் பெக்ரவுண்டில் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல் ஒலிப்பது தெரிகிறது. இதுகுறித்து  ரசிகர்கள் கமென்டஸ் செய்து வருகின்றனர். 

First published:

Tags: Aari, Actress Ramya Pandiyan, Anitha sampath, Aranthangi Nisha, Bigg Boss Tamil 4, Ramya pandiyan, Rio