Home /News /entertainment /

“சிம்புக்கு என்ன தெரியும்?” – காயத்ரி, அர்ச்சனாவை மிஞ்சும் அனிதா சம்பத் சர்ச்சை பேச்சு

“சிம்புக்கு என்ன தெரியும்?” – காயத்ரி, அர்ச்சனாவை மிஞ்சும் அனிதா சம்பத் சர்ச்சை பேச்சு

simbu anitha biggboss

simbu anitha biggboss

சிம்புவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி எதுவுமே தெரியாது, அதுமட்டுமின்றி இவர் நிகழ்ச்சியை பார்க்கவே மாட்டார் என்றும், நிரூப்பை விமர்சித்த சிம்புவுக்கு நிரூப் சொன்னதை  புரிந்து கொள்ளும் அளவுக்கு திறன் இல்லை என்றும் கூறியிருந்தார்.

  நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடை தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கும் விதம் வெகுவாக பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சிம்புவை பற்றி அல்டிமேட்டின் போட்டியாளரான அனிதா சம்பத் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  பொதுவாக 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட்ல் பலரும் முடிந்த அளவு அதிகபட்ச நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர், என்பது நள்ளிரவு கடந்து அதிகாலையில் ஹவுஸ்மேட்ஸின் உரையாடல்களின் பற்றிய வீடியோ கிளிப்புகள் மற்றும் அதன் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் மூலம் தெரிந்துவிடுகிறது.

  இந்நிலையில் சமீபத்தில் சிம்பு பற்றி அனிதா பேசிய சர்ச்சை பேச்சு வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது. கடந்த வாரம் சிம்பு ஹவுஸ்மேட்ஸிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டார், இதற்கு காரணம் ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே சிம்புவிடம் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் ஒரு ஹோஸ்ட்டுக்கு உரிய மரியாதையை கொஞ்சம் கூட கொடுக்கவில்லை என்றும் பார்வையாளர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். கடந்த வாரம் ஒரு சில போட்டியாளர்களின் நடவடிக்கையை விமர்சித்துப் பேசினார்.

  இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி சொன்ன சீரியல் நடிகை ஆல்யா மானசா


  நிரூப் விளையாடிய விதம் சரியில்லை என்று கூறியதைப் பற்றி இரவில் அனிதா நிரூப் மற்றும் சுருதி ஆகியோர் விவாதித்து கொண்டிருந்தனர். அப்போது சிம்புவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி எதுவுமே தெரியாது, அதுமட்டுமின்றி இவர் நிகழ்ச்சியை பார்க்கவே மாட்டார் என்றும், நிரூப்பை விமர்சித்த சிம்புவுக்கு நிரூப் சொன்னதை புரிந்து கொள்ளும் அளவுக்கு திறன் இல்லை என்றும் கூறியிருந்தார். ‘நீ சொன்னது ரொம்ப ஆழமானது, அதெல்லாம் சிம்புக்கு புரியாது’ என்று அனிதா சம்பத் வாய்க்கு வந்த விஷயங்களை எல்லாம் கூறிக் கொண்டிருந்தார்.

  அனிதா சம்பத் இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பே இரண்டு முறை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் போதே, அவருக்கு முன்னதாக நக்கல் தொனியில் ஒரு சில வார்த்தைகளை கூறி கமல்ஹாசனை கோபமூட்டினார். மிகவும் சீரியசாக கமல்ஹாசன் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ‘இதெல்லாம் ஏற்கனவே பேசியாச்சு. இந்த செஷன் ரொம்ப நீளமா போகுது’ என்று அனைவருக்கும் கேட்கும் வகையில் முணுமுணுத்தார். இதனால் கோபமடைந்த கமல், ‘ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு’ என்று பிரேக்கை அறிவிக்கும் போது. ‘அனிதா வித் யுவர் பர்மிஷன்’ என்று அனுமதி கேட்டு கூறியதும் சர்ச்சையானது.

  ஏற்கனவே சக போட்டியாளரான நிரூப்புக்காக மட்டுமே விளையாடி வருகிறார் அனிதா என்று பரவலாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது கடும் அதிருப்தியை பார்வையாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். நேற்று இன்று நடந்த டாஸ்க்குகளிலும் கூட தனக்காக விளையாடாமல் நிரூப்பை எந்த இடத்தில் யாராவது குற்றம் சாட்டி விடுவாரோ என்று காத்திருந்து அவருக்கு ஒரு நிரந்தரமான வக்கீல் போல, சாதகமாக வாதாட உடனேயே அந்த இடத்துக்குச் சென்று சண்டையிடத் துவங்குகிறார். எல்லா இடங்களிலும் தான் ஒரு பெண்ணியவாதி, பெண்களுக்காக பேசுபவர் என்று காட்டிக்கொள்ளும் அனிதா பிக்பாஸ் வீட்டில் ஜூலியை பற்றி அவதூறாக நிரூப் பேசி பொழுது ஜூலியை மட்டம் தட்டப் பேசினார்.

  இவை அனைத்துமே அனிதா மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் குழந்தையுடன் கர்ப்பம், எப்போதுமே இரட்டை அர்த்தத்தில் பேசுவது, நடிகைகளை, கடந்த சீசன் போட்டியாளர்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பது என்று தான் செய்வது மட்டும் சரி, மற்றவர்கள் செய்யும் எல்லாமே தவறு என்று இருக்கும் அனிதா, காயத்ரி, அர்ச்சனாவை விட அதிகமாக வெறுக்கப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர் என்ற பெயரைப் பெறும் நாள் விரைவில் இல்லை
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Entertainment, Simbhu, Vijay tv

  அடுத்த செய்தி