• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் சீசன் 5 பார்க்கத் தயாரா? - ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள்!

பிக்பாஸ் சீசன் 5 பார்க்கத் தயாரா? - ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள்!

பிக்பாஸ் சீசன் 5

பிக்பாஸ் சீசன் 5

இந்த மாதம் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய அதிகாரபூர்வமான தகவல் வெளியாகலாம்.

  • Share this:
    சின்னத்திரை வரலாற்றில், மிகப்பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ், தற்போது ஐந்தாவது சீசனுக்கு தயாராகி வருகிறது. கொரோனா தொற்று, ஊரடங்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று பல்வேறு சிக்கக்களுக்கிடையே, பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக முடிந்தது.

    கொஞ்சம் தாமதமாக ஆரம்பித்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4 முடிந்த உடனேயே அடுத்த சீசன் எப்போது வரும் என்ற கேள்வி எழும்பியது. 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியும் தொடங்கி விட்ட நிலையில், ஊரடங்கும் தளர்வுகளுடன் இருக்கின்ற சூழலில். அடுத்த சீசன் எப்போது தொடங்கப்போகிறது என்று பிக்பாஸ் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

    ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 க்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், கொரோனா தொற்று இன்னும் முழுவதும் நீங்காத சூழலில், நிகழ்ச்சி தொடக்கம் பற்றி இன்னும் முடிவு செய்ய முடியவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. ஆனால், சமீபத்திய கிடைத்துள்ள தகவல், பிக்பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

    ALSO READ |  தாலியை கழட்டி வைத்துவிட்டு வந்த 'குக் வித் கோமாளி’ கனி: காரணம் கேட்டு ரசிகர்கள் ஷாக்

    ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுக்கும், புத்தம் புதிதாய் லோகோ ஒன்று தயாரிக்கப்படும். அதே போல இந்த ஆண்டும், பிக்பாஸ் 5 ஆவது சீசனுக்கு லோகோ தயாராகி விட்டது என்றும், இந்த மாதம் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய அதிகாரபூர்வமான தகவல் வெளியாகலாம்.

    அது மட்டுமின்றி, கடந்த சீசனைப் போலவே, இந்த சீசனிலும் நிறைய புதுமுகங்கள் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்க வாய்ப்புள்ளது என்ற சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வரும் நிலையில், சீரியல் நடிகர் ஒருவர் பிக்பாசில் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

    ALSO READ |  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய போகிறதா? நடிகை ஹேமா அளித்த விளக்கம்..

    சமீபத்தில் ஒரு சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் ஒருவர், இந்த சீசனில் பங்கேற்பது உறுதி என்று கூறப்படுகிறது. மற்ற பங்கேற்பாளர்கள் பற்றிய தகவல், புதிய செட், நிகழ்ச்சி தொடக்கம், அது மட்டுமின்றி, நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக தொகுத்து வரும் நடிகர், பன்முகக் கலைஞர் கமலஹாசனின் கெட்டப் போன்றவை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Bigg Boss streaming Voot app, bigg boss 15, bigg boss 15 live streaming, bigg boss 15 streaming voot, bigg boss 15 live, bigg boss 15 audition, bigg boss 15 house, bigg boss 15 audition last date, bigg boss 15 hindi, bigg boss 15 colors tv, bigg boss 15 voot app, பிக் பாஸ் லைவ், பிக் பாஸ் 15, பிக் பாஸ் 15 லைவ் ஸ்ட்ரீமிங், பிக் பாஸ் 15 வூட், பிக் பாஸ் 15 லைவ் ஷோ, பிக் பாஸ் 15 ஆடிஷன், பிக் பாஸ் 15 ஹவுஸ், பிக் பாஸ் 15 ஆடிஷன் கடைசி தேதி, பிக் பாஸ் 15 இந்தி, பிக் பாஸ் 15 கலர்ஸ் தொலைக்காட்சி, பிக் பாஸ் 15 வூட் ஆப்

    ஒவ்வொரு ஆண்டும், நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வது முதல் என்ன மாதிரியான போட்டிகள் நடக்கும் என்பது வரை பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நாள் முழுவதும் டிரெண்ட் ஆகும்.

    Also Read :  நீச்சல் குளத்தில் கர்ப்பகால போட்டோஷூட் செய்த ஃபரீனா - வைரலாகும் புகைப்படங்கள்

    அது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும், தினசரி வெளியிடப்படும் ப்ரோமோவுக்கு லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருப்பு, பிடித்த போட்டியாளர்களுக்கு ஆர்மி உருவாக்குவது, என்ற மிகப்பெரிய திருவிழாவி கலந்து கொள்வது போல பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் இருக்கும்.

    ALSO READ |  நடிகர் சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவராஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான பதில் கிடைத்துவிடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: