Bigg Boss Tamil Live: பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்கள் தான்..

Bigg Boss Tamil 5 Live updates: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கியது.

 • News18 Tamil
 • | October 04, 2021, 08:46 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 17 DAYS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  22:30 (IST)

  பிக்பாஸ் வீட்டின் 18வது போட்டியாளராக நிரூப் வீட்டினில் செல்கிறார்.நான் அடுத்தவங்களுக்காக எதாவது பண்ணனும்னு நினைச்சேன். பிக்பாஸ்னால என்னால மாற்றத்த கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன் என்று சிபி பகிர்ந்துக்கொண்டார் .

  22:24 (IST)

  விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மாணவனாக நடித்த சிபி பிக்பாஸ் வீட்டின் 17வது போட்டியாளராக வீட்டிற்குள் செல்கிறார். நான் நல்ல சம்பளம் வர வேலைய விட்டுட்டு சினிமாவில் நுழைந்தேன். மாஸ்டர் படம் இல்லன்னா நான் என்ன ஆயிருப்பேன்னு எனக்கு தெரியல. ஒரு விஷயத்த செய்றத்துக்கு முன்னாடி பல தடவை யோசிப்பேன், ஆனால் செய்ய ஆரம்பித்த பின்பு யோசிக்கமாட்டேன் என்று சிபி கூறினார்.

  22:9 (IST)


  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது போட்டியாளராக தாமரை செல்வி செல்கிறார்.பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு  முத்து சிற்பி பாட, தாமரை செல்வி நடனமாடினார்.நான் கிட்டத்திட்ட 22 வருஷமா இந்த துறையில் இருக்கேன். என்னுடைய குழந்தைகளோட என்னால் இருக்கவே முடியாது. காலையில 5 மணிக்கு போயிட்டு மறுநாள் 11 மணிக்கு தான் வருவேன் என்று கூத்து கலைஞர்களின் கஷ்டத்தை பகிர்ந்துக்கொண்டார்.

  21:56 (IST)

  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15வது போட்டியாளராக மாஸா எண்ட்ரி கொடுத்தார் ஐக்கி பெர்ரி. மருத்துவம் படித்துவிட்டு ராப் இசையில் கலக்கும் ஐக்கி பெர்ரி என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் எனக்கூறி கமல்ஹாசனை ஐக்கி பெர்ரி ஆச்சரியப்படுத்தினார்.வீட்டிற்குள் ஐக்கி பெர்ரி சென்றதும் நமிதா மாரிமுத்து சிரித்துக்கொண்டே வரவேற்றார்.

  21:36 (IST)

  சுருதியைத் தொடர்ந்து மற்றொரு மாடலான அக்‌ஷராவை கமல்ஹாசன் வரவேற்றார். அதன் பின்பு இருவரிடமும் மாடலிங்கை பற்றி கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் என்று கேட்ட கமல்ஹாசன், அவர்களை ராம்ப் வாக்கும் செய்து காட்டும்படி கேட்டார்.பின்பு இருவரும் ஒன்றாக சேர்ந்து பிக்பாஸ் வீட்டிற்கு சென்றனர். 

  21:30 (IST)

  13வது போட்டியாளராக மாடல் சுருதி பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார். நான் நேஷனல் லெவல் கூடைப்பந்து வீரர் . ஸ்போட்ஸ் ஸ்காலர்ஷிப்ல தான் படிச்சேன். எல்லாரும் என்ன பாத்து ஊர்லேந்து தான் வந்திருக்கும்னு பேசுவாங்க. ஆனால்  யாராவது என்னால பண்ண முடியாது என்று சொன்னால், அதை கண்டிப்பா பண்ணனும்னு தோணும். எல்லாமே வாழ்க்கையில ஒரு பாடம் தான் என்று தனது கருத்தினை சுருதி பகிர்ந்துக்கொண்டார்.

  21:15 (IST)

  பிக்பாஸ் வீட்டின் 12வது போட்டியாளராக நகைச்சுவை நடிகர் மற்றும் தொகுப்பாளரான இமான் அண்ணாச்சி செல்கிறார். சின்ன வயதிலிருந்தே எனக்கு கஷ்டம் தான். தினமும் யாரையாவது சிரிக்க வைக்கணும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்படி சிரிக்க வைக்கும் போது தான் ஒருவர் என்னிடம், இங்க பண்றத சென்னையில போய் பண்ணு என்று கூற, நானும் சென்னை வந்து வாய்ப்பு தேடினேன். ஆனால் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

  21:9 (IST)


  விஜய் தொலைக்காட்சியில் 6 மணி முதல் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வரும் நிலையில், இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக், நமிதா மாரிமுத்து பிரியங்கா, அபிநய், பாவனி, சின்னபொண்ணு, நடியா சாங் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களாக சென்றுள்ளனர்.தற்போது 11வது போட்டியாளராக வருண் செல்கிறார். சண்டைப் பயிற்சி மற்றும் நடிப்பை முறையாக கற்றுக்கொண்டு நடிகராக துடிக்கும் வருண் பிக்பாஸ் வீட்டினுள் என்ன செய்கிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

  20:56 (IST)


  மலேசியா மாடலான பிக்பாஸ் வீட்டினுள் 10வது போட்டியாளராக செல்கிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது.நான் 14வது வயதிலிருந்து வேலை செய்கிறேன். என்னுடைய பில்லரே எனது கணவர் தான் என்று பகிர்ந்துக்கொண்டார் நடியா சாங் பகிர்ந்துக்கொண்டார்.

  20:52 (IST)

  பிக்பாஸ் வீட்டின் 9வது போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு பிபி வீட்டிற்குள் நுழைந்தார்.சந்திரமுகி படத்தில் நான் தோன்றிய பின்பு தான் மரியாதையே கிடைத்தது என்று பகிர்ந்துக்கொண்டார்.