பிக்பாஸ் வீட்டில் அரக்கனாக மாறிய சுரேஷ்.. புலிகேசி வேடத்தில் ரியோ..

பிக்பாஸ் வீட்டில் அரக்கனாக மாறிய சுரேஷ்.. புலிகேசி வேடத்தில் ரியோ..

சுரேஷ் - ரியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் சுவாரஸ்யமான டாஸ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக நடிகை ரேகா வெளியேறிய நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்து முடிந்துள்ளது. அதில், இந்த வார தலைவரான ரியோ, வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ள அர்ச்சனா, கடந்த வார டாஸ்க்கில் வெற்றி பெற்ற சனம் மற்றும் வேல்முருகன் ஆகியோரை நாமினேட் செய்ய முடியாது என பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி மீதமுள்ள போட்டியாளர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, ஆஜித், அனிதா மற்றும் பாலாஜி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாக்கு அளிக்கும் நடைமுறையானது தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரமோவில், ஒரு சுவாரஸ்யமான டாஸ்க் வழங்கப்படுகிறது. அதாவது அரக்கர்களும், அரக்கிகளும் என்ன தொல்லை கொடுத்தாலும் அதற்கு மற்றவர்கள் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் சிலையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான் டாஸ்க். அதில் போட்டியாளர்களை இரண்டாக பிரித்து பாதி பேர் அரக்கர்கள், அரக்கிகளும் போலவும் மீதி பேர் ராஜ குடும்பத்தை போலவும் உடை அணிந்து இருகின்றனர்.

அதில் ரியோவுக்கு புலிகேசி கெட்டப் வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக தாடியை எடுக்கும் ரியோ, தாடி உடன் இருக்கும்போது தான் மாஸாக இருக்கும், தற்போது பார் நான் குழந்தை போல இருக்கிறேன்' என கூறுகிறார்.சுரேஷ் சக்ரவர்த்தி, ரமேஷ், அனிதா ஆகியோர் அரக்கர்கள், அரக்கிகள் உடையணித்துள்ளனர். சம்யுக்தா ராணியாகவும், வேல்முருகன் ராஜா உடையிலும் காணப்படுகின்றனர். சுரேஷ் அரக்கனாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி காரசாரமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: