நேற்றைய தினம் நடந்து முடித்த பிக்பாஸ் போட்டியில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றார்.
இதில் வெற்றி குறித்து ஆரி, மற்றும் பாலாஜியிடம் கேட்கப்பட்டது. முதலில் தனது வெற்றி குறித்து பேசிய ஆரி, எனது போட்டியாளர்கள் இல்லை என்றால் நான் இல்லை. உங்களிடம் ஏற்பட்ட கருத்து மோதலினால் மட்டுமே மக்கள் இந்த இடத்தை எனக்கு கொடுத்துள்ளனர்.
என் பேச்சோ, செயலோ, உடல் மொழியோ உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என கூறிய அவர் வெளியே வந்த பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் எல்லா புகழும் உங்களுக்கே என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாலாஜி முருகதாஸ் , என்ன பேசுவதென்று தெரியவில்லை. வாழ்த்துக்கள். இந்த கப்பை இரண்டு விதமாக ஆடி ஜெயிக்கலாம். நான் ஆடியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். எவ்வளவு தவறு இருந்தாலும், சரி செய்து கொள்ளுதல் எனும் ஒரு விஷயம் இருப்பதால் தான் என்னை இரண்டாம் இடத்தில் நிக்க வைத்திருக்கின்றீர்கள். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வேறு யாருக்கு நன்றி கூறுவதென்று தெரியவில்லை.
Enaku Manasula Enna Thonudho Adha Pesiruven.. Yen Na Veliya Vandhathan Adhu Alukunnu Illa Manasula Irundhalum Alukuthan
Forgive Me If I Have Disappointed You All 😌
NAMBUNGA NAANUM NALLAVAN THAN 🥰🥺 - Cutie For A Reason ❤️#BiggBossTamil4pic.twitter.com/3mQJBoUn1w
— ᴛᴡɪɴᴋʟɪɴɢ ꜱᴛᴀʀ 🧚♀️ (@its_pree_) January 17, 2021
எனக்கு மனதில் எதையும் வைத்துக்கொள்ளும் பழக்கம் கிடையாது. அதனை அப்படியே பேசி விடுவேன். வெளியே இருந்தால் தான் அது அழுக்கு என்றில்லை. மனதில் இருந்தாலும் அது அழுக்கு தான். என்னை மன்னித்து கொள்ளுங்கள் உங்களை காயப்படுத்தியிருந்தால். என்னை இறுதி சுற்றுக்கு அனுப்பியதற்கு நான் ஆச்சர்ய பட்டேன். நம்புங்க .. நம்புங்க நானும் நல்லவன் தான் என கூறினார்.