ஸ்கெட்ச் போட்ட பிக்பாஸ்... நாமினேஷனில் நடந்த திடீர் மாற்றம்

ஸ்கெட்ச் போட்ட பிக்பாஸ்... நாமினேஷனில் நடந்த திடீர் மாற்றம்

பிக்பாஸ்

போட்டியாளர்கள் ஒன்று நினைத்தால் அதை அப்படியே மாற்றி விடுவதில் வல்லவர் பிக்பாஸ்.

  • Share this:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய சுரேஷ் பேர் வெறியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறினார்.

சனம் வெளியேற்றப்பட்டதற்கு வெளியில் எதிர்ப்புகள் எழுந்தாலும் வழக்கம் போல நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை 12-ஆக குறைந்திருக்கிறது.

கடந்த வாரம் கால் சென்டர் டாஸ்க் நடைபெற்ற நிலையில் அதில் தோல்வியடைந்தவர்கள் நாமினேஷனுக்கு செல்வார்கள் என பிக் பாஸ் அறிவித்திருந்தார். அதன்படி பாலாஜி, அனிதா, ஆரி, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். இந்த நிலையில் பிக்பாஸ் நேற்று நாமினேஷனில் ஒரு ட்விஸ்ட் வைத்தார். அதாவது கால் சென்டர் டாஸ்கில் முதல் 3 இடம் பிடித்த நபர்கள் தங்களுக்கு பதிலாக நாமினேட் ஆகாத நபர்களில் இருந்து மூவரை தேர்ந்தெடுக்கலாம் என அறிவித்தார்

அதன்படி முதல் 3 இடத்தை பிடித்த ஆரி, பாலாஜி, அர்ச்சனா ஆகிய மூவருமே இந்த வார நாமினேஷனில் இடம் பெற்று இருந்த நிலையில் அவர்களுக்கு பதிலாக மற்றவர்களை நாமினேட் செய்தனர். ஆரி - ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா - சோம் சேகரையும், பாலாஜி - கேப்ரியல்லாவையும் நாமினேட் செய்தனர்.

இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். இந்த வார தலைவர் போட்டியில் அனிதா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் ஒன்று 'புதிய மனிதா' என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும். ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார்.மனிதர்கள் டீம் இயந்திரங்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார். இந்த டாஸ்கில் அர்ச்சனா முகத்தில் முட்டையை பூச வைக்கின்றனர் அனிதா மற்றும் பாலாஜி.

மேலும் படிக்க: விஜயின் சாதனை படைத்த செல்ஃபி புகைப்படம்... 2020ம் ஆண்டின் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட பட்டியலில் தேர்வு

பின்னர் ஆரி ஏதோ கூற, அப்போது அர்ச்சனா கண்ணில் இருந்து கண்ணீர் வரும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. மேலும் சோம், நிஷாவை தூக்கிக்கொண்டு செல்கிறார். இதனால் இன்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: